ஜியோ தொலை தொடர்பு  நிறுவனம் முழுமையான ரீசார்ஜ் பிளான் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதிகபட்ச ரீசார்ஜ் தொகையான ரூபாய் 9,999 கட்டணத்தில் 810GB டேட்டாவை 420 நாட்களுக்கு வழங்குகின்றது.

ஜியோ ரீசார்ஜ் பிளான் முழுவிபரம்

ஜியோ முழுபிளான் விபரம்

 • ரூ 19 கட்டணத்தில் ஒரு நாளைக்கு 200MB டேட்டாவை பிரைம் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
 • ரூ.509 கட்டணத்தில் 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி என 168 ஜிபி டேட்டா பெறலாம்.
 • ரூ. 9999 கட்டணத்தில் 420 நாட்களுக்கு 810GB வரம்பற்ற டேட்டாவை பெறலாம்.

ஜியோ பிரைம் மற்றும் பிரைம் உறுப்பினர் அல்லாத வாடிக்கையாளர் என இரு வகையான திட்டத்தை தொடர்ந்து ஜியோ வழங்க உள்ளது.

ஜியோ ரீசார்ஜ் பிளான் முழுவிபரம்

ஜியோ ப்ரீபெயிட் டேட்டா ரீசார்ஜ் விபரங்கள் பின் வருமாறு :-

 • ரூபாய் 19 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால் ஒரு நாள் வேலிடிட்டி வழங்கப்பட்டு 200MB டேட்டா பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் ,பிரைம் பெறாத வாடிக்கையாளர்களுக்கு 100MB டேட்டா வழங்கப்படுகின்றது.
 • ரூபாய் 49 கட்டணத்தில் பிரைம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 3 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு 600MB டேட்டா வழங்கப்படுதுவடன் , ப்ரைம் பெறாத வாடிக்கையாளர்கள் 300MB டேட்டா மட்டுமே வழங்கப்படுகின்றது.
 • ரூபாய் 96 விலையில் ரீசார்ஜ் செய்தால் பிரைம் வாடிக்கையாளர்கள் 7 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா விகிதம் உயர்வேக டேட்டா மற்றும் அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், ப்ரைம் பெறாத வாடிக்கையாளர்கள் 700MB டேட்டா மட்டுமே வழங்கப்படுகின்றது.
 • ரூபாய் 149 விலையில் ரீசார்ஜ் செய்தால் பிரைம் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு மொத்தமாக 2 ஜிபி டேட்டா விகிதம் உயர்வேக டேட்டா வழங்கப்படும், ப்ரைம் பெறாத வாடிக்கையாளர்கள் 1GB டேட்டா மட்டுமே வழங்கப்படுகின்றது.
 • ரூபாய் 309 கட்டணத்தில் பிரைம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு தினமும் 1GB டேட்டா உயர் வேகத்துடன், அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், ப்ரைம் பெறாத வாடிக்கையாளர்கள் தினமும் 1GB  டேட்டா அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், 28 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.
 • ரூபாய் 509 கட்டணத்தில் பிரைம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு தினமும் 2GB டேட்டா உயர் வேகத்துடன், அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், ப்ரைம் பெறாத வாடிக்கையாளர்கள் தினமும் 2GB  டேட்டா அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், 28 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.
 • ரூபாய் 999 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும் ப்ரைம் மெம்பர்களுக்கு 120GB டேட்டா 120 நாட்களுக்கு வழங்கப்படும், பிரைம் அல்லாதவர்களுக்கு 60 நாட்களுக்கு 60ஜிபி டேட்டா வழங்கப்படும்.
 • ரூபாய் 1999 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும் ப்ரைம் மெம்பர்களுக்கு 185GB டேட்டா 150 நாட்களுக்கு வழங்கப்படும், பிரைம் அல்லாதவர்களுக்கு 90 நாட்களுக்கு 125ஜிபி டேட்டா வழங்கப்படும்.
 • ரூபாய் 4999 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும் ப்ரைம் மெம்பர்களுக்கு 410GB டேட்டா 240 நாட்களுக்கு வழங்கப்படும், பிரைம் அல்லாதவர்களுக்கு  180 நாட்களுக்கு 350 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
 • ரூபாய் 9999 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும் ப்ரைம் மெம்பர்களுக்கு 810GB டேட்டா 420 நாட்களுக்கு வழங்கப்படும், பிரைம் அல்லாதவர்களுக்கு 360 நாட்களுக்கு 750ஜிபி டேட்டா வழங்கப்படும்.

ஜியோ ரீசார்ஜ் பிளான் முழுவிபரம்

ஜியோ போஸ்பெயிட் டேட்டா விபரங்கள் பின் வருமாறு :-
 • ரூபாய் 309 கட்டணத்தில் பிரைம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு தினமும் 1GB டேட்டா உயர் வேகத்துடன், அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், ப்ரைம் பெறாத வாடிக்கையாளர்கள் தினமும் 1GB  டேட்டா அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், 30 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.
 • ரூபாய் 509 கட்டணத்தில் பிரைம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு தினமும் 2GB டேட்டா உயர் வேகத்துடன், அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், ப்ரைம் பெறாத வாடிக்கையாளர்கள் தினமும் 2GB  டேட்டா அதன் பிறகு வரம்பற்ற டேட்டாவை 128Kbps வேகத்தில் வழங்கப்படும், 30 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.
 • ரூபாய் 999 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும் ப்ரைம் மெம்பர்களுக்கு 180GB டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படும், பிரைம் அல்லாதவர்களுக்கு 30 நாட்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

இது முதல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும், சம்மர் சர்ப்ரைஸ் பெற்றவர்களுக்கு இந்த சலுகைகளை பொருந்தாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here