விரைவில் சந்தைக்கு வரவுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் ஜியோ  4ஜி ஃபீச்சர் போன் நுட்ப விபரங்கள் வெளியாகியுள்ளது. லைஃப் 4ஜி ஃபீச்சர் மொபைல் ரூ.1800 விலைக்குள் இருக்கலாம்.

ஜியோ ஃபீச்சர் போன்

லைஃப் (LYF) பிராண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபீச்சர் ஃபோன் ரூ.1800 விலைக்குள் 4ஜி வோல்ட்இ வசதியுடன் வாழ்நாள் முழுவதும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்படலாம்.

இந்த ஃபீச்சர் போனில் 4ஜி வோல்ட்இ ஆதரவு வசதி வழங்கப்பட்டதாக வரக்கூடிய இதில் ஸ்பிரட்டிரம் அல்லது குவால்காம் 205 நிறுவனத்தின் சிப்செட்களில் ஏதேனும் ஒன்றை பெற்றதாக விளங்கும். இந்த சிப்செட்களின் விலையின் அடிப்படையில் மொபைலின் உற்பத்தி விலை ரூ. 1800 வரை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

512 எம்பி ரேம் பெற்றதாக வரக்கூடிய இந்த மொபைலில் 4ஜிபி வரை உள்ளடங்கிய மெமரி பெற்றிருப்பதுடன் கூடுதலாக சேமிப்பை நீட்டிக்கும் வகையில் மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கலாம். 2 மெகாபிக்சல் விஜிஏ கேமரா பெற்றிருக்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் பீரிலோட் செய்யப்பட்டிருக்கும். இதுதவிர வை-ஃபை ,நேவிகேஷன் பெற ஜிபிஎஸ் , என்ஃபசி போன்றவற்றுடன் ஹாட்ஸ்பாட் போன்றவற்றை கொண்டதாக வரலாம் என 91மொபைல்ஸ் தளத்தின் பிரத்தியேக செய்தி வாயிலாக தெரிவிக்கின்றது.

இந்த 4ஜி ஃபீச்சர் போன் விலை ரூ.1000 முதல் ரூ.1800 விலைக்குள் பல்வேறுவசதி கொண்டதாக அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.