கடந்த செப்டம்பர் 5, 2016 அன்று ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்டு பல்வேறு சாதனைகளை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் படைத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்

ரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் - அம்பானி பெருமிதம்

ரிலையன்ஸ் ஜியோ

ஒரு ஆண்டிற்கு முன்பு தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் புரட்சி நிறுவனமாக களமிறங்கிய ஜியோ ஒரு வருடத்தில் மிக வேகமாக வளர்ந்த நிறுவனங்களில் முன்னிலை வகிக்கின்றது. இந்தியர்கள் நவீன நுட்பங்களை பெறுவதில் பின் தங்கியுள்ளனர் என்ற மாயை ஜியோ வருகையின் பின்னர் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அம்பா

இலவச ஜியோ சிம் வழங்கப்பட்டு வரம்பற்ற அழைப்புகள், ஆரம்பகட்டத்தில் தினசரி 4ஜிபி இலவச 4ஜிபி டேட்டா என தொடங்கிய தன்னுடைய பயணத்தில் அமோகமான ஆதரவை பெற்ற நிலையில் ஜியோ சிம் வாங்குவதற்கு பல மணி நேரம் டிஜிட்டல் ஸ்டோர்களில் மக்கள் தவமிருந்தனர்.

 

ஒரு வருடத்திற்கு முன்பு மாதம் ஒரு ஜிபி டேட்டா பெற வேண்டுமென்றால் ரூ.450 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் இன்றைக்கு 90 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு பெற வெறும் ரூ.400 என்ற நிலைக்கு மாறியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் - அம்பானி பெருமிதம்

இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், நாடு முழுவதும் ரோமிங் இலவசம் என  தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் மாற்றத்தை ஜியோ ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் - அம்பானி பெருமிதம்

4ஜி ஸ்மார்ட்போன் விலை கனிசமாக குறையவும், ரூ.2,999 குறைந்த விலை 4ஜி மொபைல் வரத் தொடங்கியுள்ள நிலையில் 3ஜி மொபைல் சந்தை சரிய தொடங்கியுள்ளது.

ஜியோ வருகையின் பின்னர் மொபைல் டேட்டா பயன்பாட்டில் இந்தியா சர்வதேச அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

ஆன்லைன் ஸ்ட்ரிமிங் இணையதளங்களான யூடியூப், ஹாட்ஸ்டார் டிவி உள்ளிட்ட சேவைகளின் இணைப்பு நாளுக்குநாள் தொடர்ந்து சில மாதங்களாகவே அதிகரித்து வருகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் - அம்பானி பெருமிதம்

2ஜி மற்றும் 3ஜி சேவை பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு எதுவாக பீச்சர் ரக 50 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை 4ஜி சேவையில் இணைக்கும் வகையில் பீச்சர் ரக ஜியோபோன் ரூ.1500 திரும்ப பெறதக்க பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 60 லட்சம் ஜியோ ஃபோன் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் முதற்கட்டமாக அடுத்த சில வாரங்களுக்குள் தொடங்கப்பட உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் - அம்பானி பெருமிதம்

டிராய் நிலவரப்படி ஜூன் 2017 மாதந்திர முடிவில் 123.3 மில்லியன் சந்தாதர்களை பெற்றிருந்த ஜியோ தற்போது 130 மில்லியன் பயனாளர்களை எட்டியிருப்பதாக அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாதந்தோறும் 20 கோடி ஜிபி டேட்டா என கடந்த ஒரு வருடத்தில் 150 கோடி ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர். இது  போட்டியாளர்களை விட 5 மடங்கு கூடுதலாகும். ஒரு வருடத்திற்கு முன்னால் மொபைல் டேட்டா பயன்பாட்டில் 155 வது இடத்திலிருந்த இந்தியா தற்போது உலகின் முதன்மையான இடத்தை கைப்பற்றியுள்ளது.

முகேசு அம்பானி கடிதம்

ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி ஜியோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள ஜியோ இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.நவீன நுட்பங்களை பெறுவதில் இந்தியா பின் தங்கியிருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போது புதிய நுட்பங்களை பெறுவதில் மிகப்பெரிய நிறைவை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் - அம்பானி பெருமிதம்

மேலும் இந்தியாவில் ஜியோ 4ஜி நிறுவனம் ஜியோஃபைபர், ஜியோ டிடிஎச் மற்றும் ஜியோ ஹோம் உள்ளிட்ட சேவைகளை செயல்படுத்த உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here