ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தொலை தொடர்பு துறை நிறுவனம் 4ஜி சேவையில் 108.9 மில்லியன் வாடிக்கையாளர்களை மார்ச் 31ந் தேதி வரை பெற்றிருந்தது.

ஜியோ : 10.8 கோடி வாடிக்கையாளர்கள் , பிராட்பேண்ட் , டிடிஎச் விரைவில்

ஜியோ பிராட்பேண்ட

  • 10.89 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது.
  • 1 கோடி லைஃப் பிராண்டு கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • ஜியோ ஹோம் பிராட்பேண்ட் சேவை விரைவில் ஆரம்பம்.

ஜியோ : 10.8 கோடி வாடிக்கையாளர்கள் , பிராட்பேண்ட் , டிடிஎச் விரைவில்

இந்திய தொலை தொடர்பு வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜியோ நிறுவனத்தின் இலவச சேவை நிறைவுற்றிருந்தாலும் தொடர்ந்து பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகின்ற நிலையில் ஹோம் பிராட்பேண்ட் (Fibre-to-the-Home – FTTH) சோதனை ஓட்ட சேவை முக்கிய நகரங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ஜியோ அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமும் 6 லட்சம் சந்தாதாரர்களை பெற்ற ஜியோ 83 நாட்களில் 50 மில்லியன் சந்தாதாரர்களை ,  170 நாட்களில் 100 மில்லியன் அல்லது 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்த நிலையில் மார்ச் 31ந் தேதி முடிவின் படி 10.8 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்ததாக டிராய் அமைப்பில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

ஜியோ : 10.8 கோடி வாடிக்கையாளர்கள் , பிராட்பேண்ட் , டிடிஎச் விரைவில்

மொபைல் டேட்டா பயன்பாடு

  • அமெரிக்காவின் மொத்த மொபைல் டேட்டா பயன்பாடு அளவுக்கு ஈடாக ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டுமே டேட்டா பயன்படுத்துகிறார்கள்.
  • சீனாவின் மொபைல் டேட்டாவை விட 50 சதவீத கூடுதல் டேட்டா பயன்படுத்துகிறார்கள்.
  • தினமும் 110 கோடி GB டேட்டா பயன்பாட்டை ஜியோ வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்.
  • தினமும் சராசரியாக 220 கோடி குரல் வழி அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது.
  • தினமும் சராசரியாக 220 கோடி வீடியோ அழைப்புகளை ஜியோ மேற் கொள்ளகின்றதாகும்.

லைஃப் (Lyf) பிராண்டு

ஜனவரி முதல் மார்ச் 2017 வரையிலான மூன்று மாதங்களில் மட்டுமே 10 மில்லியன் (ஒரு கோடி) கருவிகளை லைஃப் பிராண்டில் விற்பனைக்கு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 2.6 மில்லியன் (26 லட்சம்) ஜியோஃபை ரூட்டர்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜியோ டவர்கள்

தற்பொழுது 1 லட்சம் ஜியோ தொலை தொடர்பு கோபுரங்களை பெற்றுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் 1 லட்சம் தொலை தொடர்பு கோபுரங்களை விரைவில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

ஜியோ : 10.8 கோடி வாடிக்கையாளர்கள் , பிராட்பேண்ட் , டிடிஎச் விரைவில்

ஜியோ ஹோம் பிராட்பேண்ட்

ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக 1Gbps வேகத்தில் வழங்கும் வகையிலான பிராட்பேண்ட் சேவையை முதற்கட்டமாக முன்னணி நகரங்களில் தொடங்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here