ரிலையன்ஸ் ஜியோ சேவையில் புதிதாக ஜியோ டண் டணா டண் (Jio dhan dhana dhan)என்ற பெயரில் மூன்று மாதங்களை கொண்ட அதிரடி பிளானை ஜியோ அறிவித்துள்ளது. இந்த அதிரடி பிளானில் 84 நாட்களுக்கு பலனை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ஜியோ டண் டணா டண் என்றால் என்ன ? - முழுவிபரம்

ஜியோ டண் டணா டண் பிளான் என்றால் என்ன ?

  • ரூபாய் 309 பிளானில் பிரைம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா பெறலாம்.
  • ரூபாய் 509 பிளானில் பிரைம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா பெறலாம்.
  • புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு புதிய பிளான்கள் வந்துள்ளது.

டிராய் அதிரடியாக விதித்த சம்மர் சர்ப்ரைஸ் தடையை தவிடுபொடியாக்கும் வகையில் வெளியிடபட்டுள்ள புதிய தண் தணா தண் திட்டங்கள் ஜியோவை மீண்டும் தலைநிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது. இனி பிரைம் உறுப்பினராக கால வரையில்லாமல் ரீசார்ஜ் செய்யும் வகையில் ரூ 99 பிளானை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் வந்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பிளானில் எந்த இடத்திலும் இலவசம் என்ற வார்த்தையை ஜியோ சேர்க்காமல் ஆனால் ஒவ்வொரு பிளான்களும் மாதம் 28 நாட்களாக கணக்கிடப்பட்டு மொத்தம் 84 நாட்களுக்கு அதாவது மூன்று மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரைம் திட்டத்தை தொடர்ந்து ஜியோ செயல்படுத்தி வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில் புதிய வாடிக்கையாளர்கள் அல்லது இதுவரை ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 கூடுதலாக சேர்த்து டண் டணா டண் பிளான்களில் வந்துள்ளது.

ஜியோவின் அனைத்து பிளான்களிலும் வழக்கம்போல இலவச அழைப்புகள் , தினமும் 100 எஸ்எம்எஸ் , ஜியோ ஆப்களுக்கு இலவச பயன்பாடு மற்றும் வரம்பற்ற டேட்டா போன்றவற்றை பெற்றே வந்துள்ளது.

டண் டணா டண் ரீசார்ஜ் செய்வது எப்படி ?

இதற்கு முன்பாக ஜியோ வழங்கிய பிரைம் மற்றும் முதல் மாதம் ரீசார்ஜ் மார்ச் 31க்கு முன்பாக செய்தவர்கள் அல்லது சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் வழங்கப்பட்ட காலத்தில் ரீசார்ஜ் செய்தவர்கள்  தன் தனா தன் சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

ஜியோ டண் டணா டண் என்றால் என்ன ? - முழுவிபரம்

புதிதாக ஜியோ சிம் வாங்குபவர்கள் , இது வரை பிரைம் ரீசார்ஜ் செய்து முதல் மாத ரீசார்ஜ் செய்யாதவர்கள் , அதாவது பிரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் என இரண்டையும் செய்தாவர்கள் இந்த புதிய பிளானை தேர்ந்தெடுக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைகளில் ரீசார்ஜ் செய்யலாம்.. இதற்கு மேற்பட்ட விலை உள்ள மற்ற பிளான்கள் விரைவில் வரலாம்…

தினமும் ஒரு ஜிபி உயர்வேக டேட்டா பெற பிரைம் வாடிக்கையாளர்கள் ரூபாய் 309 ரீசார்ஜ்செய்ய வேண்டும். பிரைம் பெறாத அல்லது புதிய வாடிக்கையாளர்கள் ரூ 408 (309+99) கொண்டு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

தினமும் 2 ஜிபி உயர்வேக டேட்டா பெற பிரைம் வாடிக்கையாளர்கள் ரூபாய் 509 ரீசார்ஜ்செய்ய வேண்டும். பிரைம் பெறாத அல்லது புதிய வாடிக்கையாளர்கள் ரூ 608 (509+99) கொண்டு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

தினசரி பயன்பாட்டு டேட்டா காலியான பிறகு 128Kbps வேகத்தில் வரம்பற்ற இணையத்தை பெறலாம்.

ஜியோ டண் டணா டண் என்றால் என்ன ? - முழுவிபரம்

சந்தேகங்கள் என்ன ?

இதற்கு முன்பாக ரீசார்ஜ் செய்தவர்களுக்கு அதாவது சம்மர் சர்ப்ரைஸ் அல்லது மார்ச் 31க்கு முன்பாக பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கட்டணமாக ரீசார்ஜ் செய்த தொகை இந்த மூன்று மாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அவர்களுக்கு முற்றிலும் இலவச சேவையை தொடரும்.

இனி புதிதாக சிம் வாங்குபவர்கள் மற்றும் இதுவரை ரீசார்ஜ் செய்தாவர்களுக்கு மட்டுமே முதல் ரீசார்ஜ் செய்யும் முறையாக தன் தனா தன் ஆஃபர் பொருந்தும்.

ஜியோ டண் டணா டண் என்றால் என்ன ? - முழுவிபரம்

தொடர்ந்து இணைந்திருக்க கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்தை பின்பற்றுங்கள்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here