100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்

முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களை எதிர்வரும் தீபாவளி சீசனில் மகிழ்விக்க முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து 149 ரூபாய் மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 % சதவிகித கேஷ்பேக் வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதலாக புதிய பிரிப்பெய்ட் வாங்குபவர்களுக்கு 1699 ரூபாய் ஓராண்டுக்கான பிளான் ஒன்றையும் அறிவித்துள்ளது.

தீபாவளி கேஷ்பேக் ஆப்பர்களுக்கான கூப்பன்கள், மை ஜியோ வில் உள்ள மை கூப்பன்கள் செக்சனில் இணைக்கப்பட்டு விடும். இந்த 100 சதவிகித ரீஜார்ச்கள் பல்வேறு ரீச்சார்ஜ்களுக்கும் கிடைக்கும். இந்த ஆப்பரை ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளாலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூப்பன்களை வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது மை ஜியோ ஸ்டோர்களில் ரீடீம் செய்து கொள்ள முடியும். இந்த புதிய ஆப்பர் நம்பர் 30ம் தேதி வரை மட்டுமே என்றும், கூப்பன்களை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை ரீடீம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்

இதுமட்டுமின்றி ஜியோ நிறுவனம் புதிதாக 1699 ரூபாயில் ஆண்டுக்கான ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த பிளானில் வாடிக்கையாளர்கள் 1.5GB அளவிலான 4G டேட்டாக்களை 365 நாட்களுக்கு பெறலாம். அதாவது மொத்தமாக 547.5 GB அளவு கொண்ட 4G டேட்டாக்கள் ஆகும். தினமும் 1.5GB அளவுக்கு டேட்டா செலவிட்ட பின்னர் டேட்டா வேகம் 64kbps அளவாக குறைக்கப்படும்.

இந்த பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ்கால்கள், நாள் ஒன்று 100 எஸ்எம்எஸ் மட்டுமின்றி ஜியோ அப்களான, ஜயோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ மக்ஸ், ஜியோ மியூசிக் போன்றவைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.