ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் செட்டப் பாக்ஸ் படங்கள் வெளியானது

ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு விதமான இலவச சேவைகளை தொலைதொடர்பு துறையில் வழங்கி வருகின்ற நிலையில் ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவையை அடுத்த சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜியோ டிடிஎச்

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவையை கடந்த செப்டம்பரில் தொடங்கி வருகின்ற மார்ச் 31 ,2017 வரை வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் போன்றவற்றில் இலவச டேட்டா சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள் , எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் வழங்கப்படுகின்றது.  சமீபத்தில் ஜியோ நிறுவனம் சம்மர் சர்பரைஸ் என்ற பெயரில் ஜூன் மாதம்வரை இலவச இன்டர்நெட் சலுகையை அறிவித்துள்ளது.

 

புதிதாக வெளி வந்துள்ள செட் டாப் பாக்சிலும் பிராட்பேண்ட் இணைய சேவை வழியாகவே தொலைக்காட்சி சேவையை வழங்கும் அமைப்பை பெற்றுள்ளது.

மேலும் படிங்க – ஜியோ அன்லிமிடேட் டவுன்லோடு 3 மணி நேரம்

ஜியோ DTH பிளான்

ஜியோ டிடிஎச் சேவையில் மிகவும் உயர்தரமான சேவையை வழங்கும் நோக்கில் இதனை தொடங்க ரிலையன்ஸ் திட்டமிட்டு வருகின்றதாம். டிடிஎச் சேவை ஆனது ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் செட்டப் பாக்சில் இயங்கும் வகையில் இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து நேரடியாக சேவையை வழங்க திட்டமிட்டு வருகின்றதாம். இதன் அடிப்படையில் ஜியோ பிராட்பேண்ட் இணைப்பின் 1ஜிபி வேகத்தின் வாயிலாக டிடிஎச் சேவை இணைத்து தொலைகாட்சி சேவையை வழங்லாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எனவே தங்குதடையின்றி எவ்விதமான லோடிங் சிரமும் இல்லாமல் தொலைகாட்சி சேவைகளை உயர்தர ஹெச்டி நுட்பத்தில் கண்டு மகிழ வாய்ப்புகள் உள்ளது. இது குறித்தான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் ஜியோ 4ஜி போன்றே இதிலும் வெல்கம் சலுகை 90 நாட்களுக்கு வழங்கப்படுமாம்.. அதற்கு மேல் ரூ.100 முதல் ரூ. 200 வரையிலான கட்டணத்தில் ஜியோ டிடிஎச் கிடைக்கும். ஜியோ டிடிஎச் செட்டப் பாக்ஸ் விலை ரூ.4500 இருக்கலாம். வெளியாகியுள்ள படங்கள் வாயிலாக ஜியோ செட்டப் பாக்ஸ் சோனி அல்லது பிலிப்ஸ் நிறுவனத்துடையதாக (S/PDIF (Sony/Philips Digital Interface Format)) இருக்கும்.

தொடர்ந்த ஜியோ சேவை தொடர்பான செய்திகளை படிக்க கேட்ஜெட்ஸ் தமிழன் பேஸ்புக் பக்கத்தை லைக் பன்னுங்க.. @gadgetstamilan

 

Recommended For You