ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஜிகாபைபர் பிராடுபேண்டுகளுக்கான சேவையை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. முகேஷ் அம்பானி-யின் நிறுவனமான இந்த நிறுவனம், தங்கள் சேவையை விரும்பும் வாடவாடிக்கையாளர்களுக்கு விரைவில் பிரிவியூ ஆப்பரை அறிமுகம செய்ய உள்ளது முன்னிரிமை அடிப்படையில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த பிரிவியூ ஆப்பரில், மூன்று மாதம், சோதனை அடிப்படையில் அதிவேக டேட்டாக்களை பயனாளர்களுக்கு வழங்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜிகா பைபர் குறித்து முதல் முறையாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஜிகா பைபர் பிரிவியூ ஆப்பர் மற்றும் ஜியோ ஜிகாபைபர் பிராட்டுபேண்ட் சர்விஸ் குறித்த தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது ஜியோ ஜிகாபைபர் பிரிவியூ ஆப்பர்களின் படி, ஜிகாபைபர் வாங்க உள்ள வாடிக்கையாளர்கள் மொத்தமாக 90 நாட்களுக்கு 300ஜிபி டேட்டாகளை, அதாவது மாதத்திற்கு 100ஜிபி டேட்டா என்ற அடிப்படையில் இலவசமாக பெறலாம்.

இந்த பிரிவியூ ஆப்பரை அதிக லாபகரமானமாற்றும் நோக்கில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூடுதலாக 40 ஜிபி டேட்டாகளை வழங்க உள்ளது. ஒருவேளை நீங்கள் 100 ஜிபி டேட்டாக்களை ஒரு மாத காலத்திற்குள் செலவிட்டு இருதால், இந்த கூடுதல் சலுகையான 40ஜிபி டேட்டாவை மை ஜியோ அல்லது ஜியோ.காம் மூலம் டாப்அப் செய்து கொள்ளலாம். நிறுவனம் தரப்பு தகவல்களின் படி, ஜிகாபைபர்கள், 1Gbps வேகத்தில் செயல்படும் என்று தெரிகிறது. இந்த வேகத்தில் பயனாளர்கள் 4k வீடியோகள் மற்றும் VR கேம்ஸ்களை எளிதாக பிளே செய்ய முடியும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ பைபர் சேவைக்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.4,500-ஐ திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்பு தொகையாக வசூல் செய்கிறது. இந்த தொகை, டெபிட், கிரெட்டி கார்டுகள் மூலமாகவோ, ஜியோ மணி அலல்து பேடிஎம் மூலமாகவோ செலுத்தலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் ஜியோ ஜிகாபைபர்களுக்கான ப்ரீபெய்டு பிளான்களை வரும் மாதங்களில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ முதலில் ப்ரீபெய்டு பிளான்களை அறிமுகம் செய்து விட்டு, போஸ்ட்பெய்டு பிளான்களை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஜிகாபைப்பர் ப்ரீவியூ ஆப்பர்களான 90 நாள் சேவை நிறைவு பெற்றதும், வாடிக்கையாளர்கள், ப்ரீபெய்டு பிளான்களுக்கு மாறி கொள்ள முடியும்.

வாடிக்கையாளர், தங்கள் சேவையை துண்டித்து கொள்வதோடு, பாதுகாப்பு வைப்பு தொகையை திரும்ப பெற்று கொள்ளவும் முடியும். ஜிகாபைபர் சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ் ஜியோ இணையதளத்தில், தங்கள் வீடு, அலுவலக முகவரி மற்றும் மொபைல் நம்பரை பதிவு செய்து முன்பதிவு செய்யலாம். இதை அந்த இணைய தளம் OTP அனுப்பி சோதனை செய்யும். சோதனை நிறைவு பெற்றது உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டு விடும். ஜியோ ஜிகாபைபர் சேவையை முன்பதிவு செய்ய எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவு செய்த உடனே ஜிகாபைபர் சேவை கிடைத்து விடும் என்று அர்த்தமாகிவிடாது. இந்த நிலையில் நீங்கள் ஜியோபைபர் சேவையின் ப்ரீவியூ ஆப்பர்களை பெறலாம்.

நீங்கள் பதிவு செய்த தகவல்களை கொண்டு, அந்த பகுதியில் ஜியோபைபர் சேவைக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டை பொருத்து, நிறுவனம் உங்களை ப்ரீவியூ ஆப்பருக்கு உங்களை பதிவு செய்து கொள்ள கேட்டு கொள்ளும். இந்த ப்ரீவியூ ஆப்பரில், ரிலையன்ஸ் ஜியோ, எந்த இன்டாலேசன் சார்ஜ்யையும் வசூல் செய்யாது. ரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர்கள் பைபர் ஆப்டிக் கனெக்டிவிட்டியை அடிப்படையாக கொண்ட அதிவேக இன்டர்நெட் கனெக்ஷன் ஆகும். பைபர் நெர்வோர்க்களை எதிர்காலத்தில் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களுடன் அப்கிரேட் செய்யும் போது புதியாக இன்ச்டாலேசன்கள் எதுவும் தேவைப்படாது. இவை ஏலேக்ரானிக் லைட் ப்ளஸ்களை உருவாக்கும்.