ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் ஜியோ மற்றும் லைஃப் (Lyf) இணைந்து 20 சதவிகித கூடுதல் டேட்டாவை தினமும் வழங்குகின்றது. இந்த சலுகை லைஃப் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ Lyf

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவாக செயல்படுகின்ற லைஃப் ஸ்மார்ட்போன் பிராண்டின் வாட்டர் வரிசை மொபைல்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.2,999 முதல் லைஃப் கருவி மொபைல்களில் வாட்டர் வரிசை ரூ.6600 முதல் ரூ.9,499 வரை கிடைக்கின்றது. உங்களது ஜியோ தினசரி டேட்டா பயன்பாடு 1ஜிபி என்றால் கூடுதலாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டு 1.2ஜிபி டேட்டா தினசரி பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் லைஃப் பிராண்டு மொபைல் விற்பனை சரிவினை சந்தித்து வருவதாக சமீபத்திய சைபர்மீடியா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் 2016ல் 22 லட்சம் லைஃப் கருவிகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 7.4 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றது.

ரிலையன்ஸ் லைஃப் மொபைல்கள் ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் mylyf மற்றும் ஆன்லைன் இணையதளங்களிலும் கிடைக்கின்றது.