கலர்ஃபுல்லான நிறங்களில் ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ தொலை தொடர்பு நிறுவனத்தின் ஜியோ ஃபை கருவிகளில் புதிதாக 8 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1999 விலையிலே ஜியோஃபை கிடைக்க உள்ளது.

ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட்

ஜியோ நிறுவனம் தனது அதிரடியான அறிவிப்புகளால் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ஜியோ டாங்கில்களில் ஆரம்பத்தில் கருப்பு வண்ணம் வழங்கப்படிருந்து வந்த நிலையில், தற்பொழுது 8 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.

வெள்ளை, பிங்க், மாரிகோல்டு, நீலம், பச்சை, லைம் மற்றும் சிவப்பு என 8 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது. வண்ணங்களை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இந்த கருவிகளில் இடம்பெறவில்லை.

ஜியோஃபை சிறப்பு சலுகை விபரம்..

பழைய டாங்கிலுக்கு 100 % கேஸ்பேக் சலுகை விபரம்

நீங்கள் பயன்படுத்தி வருகின்ற வேறு நிறுவனங்களின் மோடம் மற்றும் ரவுட்டர்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் அல்லது மினி ஸ்டோர் போன்றவற்றில் பழைய டாங்கில்களை கொடுத்து ஜியோஃபை வாங்கலாம். ஆனால் பழைய ஜியோஃபை கருவிக்கு இந்த சலுகை பொருந்தாது.

திரும்ப பெறப்படும் டாங்கில்களின் விபரம் பின்வருமாறு ;-

உங்களுடைய ஏர்டெல், ஐடியா, வோடபோன், டாடா, எம்டிஎஸ், ஆர்காம், மைக்ரோமேக்ஸ், D-லிங்க், ஹூவாய், ஐபால், ZTE, லாவா, இன்டெக்ஸ், நெட்கியர் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களின் கருவிகள் திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருவிகளை திரும்ப பெற்றுக்கொண்டாலும் ஜியோஃபை வாங்குபவர்கள் ரூ.1999 கட்டணம் செலுத்துவதுடன் முதல் ரீசார்ஜ் எனப்படுகின்ற தன் தனா தன் பிளான் அடிப்படையில் ரூ.408 அல்லது ரூ.509 ரீசார்ஜ் செய்வதனால் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும்.

அதன்பிறகு, நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் பொழுது ரூ. 201 மதிப்புள்ள ஜியோ பூஸ்டர் பேக் அதாவது தினசரி பயன்பாட்டிற்கு பிறகு வேகம் குறையாமல் இணையத்தை பயன்படுத்த உதவும் மாதம் 5GB டேட்டாவை 10 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது.

இதன் மதிப்பு 10×201 = ரூபாய் 2010 எனவே தற்பொழுது  நீங்கள் டாங்கில் வாங்கிய பணத்தை 100 சதவீதம் அடுத்த 10 மாதங்களில் திரும்ப பெறலாம். இதுவே 100 சதவீத கேஸ்பேக் பிளானாகும்.

புதிய ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் சலுகை

ஜியோ நிறுவனம் முதன்முறையாக ஜியோ ஃபை 4G ஹாட் ஸ்பாட்டை வாங்குபவர்கள் ரூ.1999 கட்டணம் செலுத்துவதுடன் முதல் ரீசார்ஜ் எனப்படுகின்ற தன் தனா தன் பிளான் அடிப்படையில் ரூ.408 அல்லது ரூ.509 ரீசார்ஜ் செய்வதனால் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும்.

அதன்பிறகு, நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ்செய்யும் பொழுது ரூ. 201 மதிப்புள்ள ஜியோ பூஸ்டர் பேக் அதாவது தினசரி பயன்பாட்டிற்கு பிறகு வேகம் குறையாமல் இணையத்தை பயன்படுத்த உதவும் மாதம் 5GB டேட்டாவை 5 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது.

இந்த சலுகையின் வாயிலாக ரூ.1005 வரை கேஸ்பேக் பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

2ஜி ,3ஜி, 4ஜி என எந்த மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் உள்பட 10க்கு மேற்பட்ட கருவிகளை வைபை வாயிலாக இணைய இணைப்பை பெறலாம்.

நம்முடைய தளத்தில் முன்பு வெளிவந்த ஜியோஃபை வாங்கினால் லாபமா ? நஷ்டமா பதிவை படிக்க சொடுக்குக

 

Recommended For You