முதல் வருடத்தை வெற்றிகரமாக கடந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, ஜியோ நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ முதலாம் ஆண்டு நிறைவு

கடந்த செப்டம்பர் 5, 2016 அன்று அதிகார்வப்பூர்வமாக தொலைத்தொடர்பு துறையில் தனது 4ஜி சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிய நிலையில் முதல் வருட நிறைவில் 130 மில்லியன் அதாவது 13 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக முகேசு அம்பானி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி ஜியோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள ஜியோ இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.நவீன நுட்பங்களை பெறுவதில் இந்தியா பின் தங்கியிருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போது புதிய நுட்பங்களை பெறுவதில் மிகப்பெரிய நிறைவை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டிராய் நிலவரப்படி ஜூன் 2017 மாதந்திர முடிவில் 123.3 மில்லியன் சந்தாதர்களை பெற்றிருந்த ஜியோ தற்போது 130 மில்லியன் பயனாளர்களை எட்டியிருப்பதாக அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாதந்தோறும் 20 கோடி ஜிபி டேட்டா என கடந்த ஒரு வருடத்தில் 150 கோடி ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர். இது  போட்டியாளர்களை விட 5 மடங்கு கூடுதலாகும். ஒரு வருடத்திற்கு முன்னால் மொபைல் டேட்டா பயன்பாட்டில் 155 வது இடத்திலிருந்த இந்தியா தற்போது உலகின் முதன்மையான இடத்தை கைப்பற்றியுள்ளது.

ஒரு ஆண்டிற்கு முன்பு 1ஜிபி டேட்டா 250 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது ரூ.10 என்ற நிலைக்கு குறைந்துள்ளது. மேலும் சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஜியோபோன் 60 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருக்கின்ற நிலையில் செப்டம்பர் 21 முதல் டெலிவரி தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here