ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி சேவையில் அடுத்தகட்ட நகர்வாக அமைய உள்ள 4ஜி வோல்ட்இ ஃபீச்சர் மொபைல்களை இன்டெக்ஸ் நிறுவனம் தயாரிப்பதுடன் ஜியோ லைஃப் நவரத்தனா சீரிஸ் என்ற பெயரில் 9 ஃபிச்சர் மொபைல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோ லைஃப் நவரத்தனா

ரூ.500 ஆரம்ப விலை முதல் மொத்தம் ஒன்பது 4ஜி வோல்ட் ஆதரவு பெற்ற ஃபீச்சர் மொபைல்களை ஜியோ நிறுவனம் இன்டெக்ஸ் வாயிலாக தயாரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக இன்டெக்ஸ் டெக்னாலாஜிஸ் தலைவர் எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிய வந்துள்ளது.

தற்போது ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் லைஃப் பிராண்டில் வாட்டர் , எர்த் உள்ளிட்ட வரிசைகளில் மொத்தம் 19 மொபைல்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஃபீச்சர் 4ஜி வோல்ட்இ மொபைல்களுக்கு என பிரத்தியேக லைஃப் நவரத்தினா சீரிஸ் மூலம் பல்வேறு விலை மாறுபாடு மற்றும் வசதிகள் போன்றவற்றை பெற்ற 9 4ஜி பட்டன் போன்களை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை இந்தியாவைச் சேர்ந்த இன்டெக்ஸ் தயாரிப்பதனால் சிறப்பு வரி சலுகைகளும் கிடைக்கும்.

எனவே ஜியோ 4ஜி வோல்ட்இ மொபைல் ரூ. 500 முதல் ரூ. 2369 வரை 9 விதமான வகைகளில் பல்வேறு வசதிகளுடன் இந்த மொபைல் வரலாம். 15 கோடிக்கு மேற்பட்ட மொபைல்களை விற்பனை செய்ய ஆரம்பகட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2ஜி சேவையில் உள்ள அனைவரையும் 4ஜி சேவைக்கு மாற்ற ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மொபைலும் பன்டில் ஜியோ ஆப்பர் மூன்று மாதங்கள் இலவச இணைய சேவை வழங்கப்படக்கூடும்.

முக்கிய விபரங்கள் மற்றும் அதிகார்வப்பூர்வ தகவல் ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஜூலை 21ந் தேதி வெளிவரும் இணைந்திருங்கள்..கேட்ஜெட்ஸ் தமிழன் இணையதளத்துடன்..!