4ஜி சேவையில் பல்வேறு வசதிகளை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் முந்தைய பிளான்களுக்கு கூடுதல் வேலிடிட்டி மற்றும் ரூ. 399 க்கு ஜியோ தன் தனா தன் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

 

தன் தனா தன் பிளான்

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக ரூ. 99 பிரைம் ரீசார்ஜ் கட்டணம் மற்றும் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.309 என மொத்தம் ரூ.408 ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி தந்தது.

தற்போது மீ ண்டும் தன தனா பிளானை ரூ. 399 கட்டணத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வரம்பற்ற அழைப்புகள், இலவச எஸ்.எம்.எஸ் போன்றவற்றுடன் கூடுதலாக தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் அதன் பிறகு நொடிக்கு 128 கிலோபைட் வேகத்தில் இணையத்தை வழங்க உள்ளதாக ஜியோ குறிப்பிட்டுள்ளது.

இந்த சலுகையை அனைத்து ஜியோ சிம் பயனாளர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்கியுள்ளது. குறிப்பாக ரூ. 309 திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ரூ.509 திட்டத்திலும் 56 நாட்கள் என வழங்கியுள்ளது.