ரிலையன்ஸ் ஜியோ போன் முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விபரம்

முகேசு அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோபோன் முன்பதிவு நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கப்பட்டு 30-40 லட்சம் மொபைல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

 

ரிலையன்ஸ் ஜியோ போன்

இலவசமாக அறிமுகம் செய்யப்படுகின்ற பீச்சர் ரக ஜியோபோனுக்கு முன்பதிவு நேற்று மாலை முதல் தொடங்கப்பட்டதை தொடர்ந்து அதிகப்படியான பயனர்கள் அதாவது 40 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களை பெற்ற ஜியோ இணையதளம் மற்றும் மை ஜியோ ஆப்பில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியதை தொடர்ந்து இணையதளம் கடுமையான சிரமங்களுக்கு பிறகு முடங்கியது.

நேற்றைய முன்பதிவில் பயனாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தாலும் 3 முதல் 4 மில்லியன் அதாவது 30 முதல் 40 லட்சம் பயனாளர்கள் ஜியோஃபோனுக்கு முன்பதிவு செய்திருக்கலாம் என நம்பதகுந்த வட்டாரங்கள் வாயிலாக கூறப்படுகின்றது.

ஜியோ போன் நுட்பம்

2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.

முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

தினசரி ஒரு லட்சம் மொபைல்கள் என 50 கோடி மொபைல்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் நாள் முன்பதிவு 30 முதல் 40 லட்சத்தை எட்டியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் தொடர்ந்து தற்போது முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

எங்கே முன்பதிவு ; ஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (Myjio app) மற்றும் ஜியோ இணையதளம் (jio.com) போன்றவற்றில் Pre Book now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்வதற்கு மாலை 5.30 மணி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக ரூ. 500 செலுத்தலாம், அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம்.

பணம் செலுத்துவது எவ்வாறு ?

ஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட் , டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம்.

36 மாதங்களுக்கு பிறகு ரூ. 1500 கட்டணத்தை ஜியோ இன்ஃபோகாம் திரும்ப கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You