ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் கால அளவு தற்போது ஆகஸ்ட் மாதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மை ஜியோ ஆப் வழியாக கூடுதலாகவும் இணையத்தில் குறைவாகவும் காட்சி தருகின்றது.

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ்

மிக வேகமாக வளர்ந்த 4ஜி நெட்வொர்க் என்ற பெருமைக்குரிய ஜியோ நிறுவனத்தின் இலவச சேவைகள் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் இறுதியாக தன் தனா தன் என்ற பிளானுக்கு முன்பாக வழங்கப்பட்ட சம்மர் சர்ப்ரைஸ் என்ற மூன்று மாத வேலிடிட்டி பெரும்பாலானோருக்கு நிறைவடைய தொடங்கி விட்டது.

சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்துக்கு டிராய் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு புதிதாக தன் தனா தன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.

பெரும்பாலான ஜியோ சிம் பயனர்களுக்கு இந்த வாரத்தில் சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள் நிறைவடைவதனால் அடுத்த ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாமல் முந்தைய ரீசார்ஜ் செய்யப்பட்ட பிளானின் அடிப்படையில் வேலிடிட்டி 28 நாட்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மைஜியோ ஆப் வாயிலாக கூடுதல் வேலிடிட்டி காலமும், ஜியோ இணையதளத்தில் முந்தைய வேலிடிட்டியை காண்பிக்கின்றது. இந்த குழுப்பம் அடுத்த சில நாட்களில் சரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜியோஃபை கருவி மற்றும் ஜியோ 4ஜி வாடிக்கையாளர்கள் மை ஜியோ ஆப்பினை தரவிறக்கி சரியான தேதியை அறிந்து கொள்ளுங்கள்.

my jio app⇒ signin/sigup⇒ Balance ⇒ dashboard

jio website ⇒ signin/sigup⇒ my plan

மேலே வழங்கப்பட்டுள்ள படம் எமது ஜியோ எண்ணிற்கு ஆப் மற்றும் இணையதளத்தில் காட்டுவது தொகுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மீண்டும் தன் தனா தன் பிளான் என்ற பெயரில் ரூ.399 க்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பிரைம் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

நாளை ஜியோ நிறுவனம் ஜியோ ஃபீச்சர் மொபைல், டிடிஎச் மற்றும் ஜியோஃபைபர் போன்ற சேவைகளின் முக்கிய விபரங்களை வெளியிடும் இணைந்திருங்கள் எமது ஃபேஸ்புக் பக்கத்தில் : fb.com/gadgetstamilan

உங்கள் சந்தேகங்களுக்கு கீழுள்ள கமெண்ட் பாக்ஸை பயன்படுத்துங்கள்.