இ- ஸ்போர்ட்ஸ் துறையில் காலடி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ

பல்வேறு துறைகளில் அதிரடி காட்டி வரும் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது இ-ஸ்போர்ட்ஸ் துறையிலும் நுழைந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கான க்ரவுண்ட் ஒர்க் தொடங்கப்பட்டு விட்டன. முதல்கட்டமாக ரியோட் கேம்ஸ் இந்தியாவின் தலைவராக இருந்த அனுராக் குரானாவை இ-ஸ்போர்ட்ஸ் பிரிவின் தலைவராக ரிலையன்ஸ் ஜியோ நியமித்துள்ளது.

இ – ஸ்போர்ட்ஸையும் ரிலையன்ஸ் கையில் எடுக்கும் என்று இந்த துறையில் உள்ளவர்கள் கடந்த சில மாதங்களாக கணித்து வந்தனர். அதற்கு ரிலையன்ஸின் நடவடிக்கைகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன. மேலும், குரானா தன்னுடை லிங்கெடின் புரோஃபைலில் ரிலையன்ஸ ஜியோ இ-ஸ்பார்ட்ஸ் பிரிவின் தலைவர் என்று பணியை குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரும் நிறுவனமாக இருந்தபோதிலும், இ-ஸ்போர்ட்ஸ் துறையில் ரிலையன்ஸ் ஜியோ எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், க்ளாஷ் ராயல், PUBG Mobile போன்றவை நீண்டகாலமாக இ-ஸ்போர்ட்ஸ் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதேபோன்று ரிலையன்ஸும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு புதிய யுக்திகளை கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ தனது ஜிகா ஃபைபர் சர்வீசை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்த இ-ஸ்போர்ட்ஸ் இன்னும் உதவும். மொபைல் ஃபோன் நிறுவனங்களான நசாரா, யூசிஃபெர் போன்றவை இ-ஸ்போர்ட்ஸ் தொடர்பாக ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகின்றன. எப்படிப் பார்த்தாலும், இ-ஸ்போர்ட்ஸில் முத்திரை பதிக்க ரிலையன்ஸ் ஜியோவுக்கு இதுதான் சரியான டைம் என துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You