ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக களமிறங்க உள்ள ரூ.1000 விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள  ஜியோ 4ஜி ஃபீச்சர் போன் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ 1000 விலையில் ஜியோ 4ஜி ஃபீச்சர் போன் வருகை விபரம்

 

 ஜியோ 4ஜி ஃபீச்சர் போன்

  • அதிகபட்சமாக 4ஜி ஆரதவு பெற்ற ஃபீச்சர் போன் விலை ரூ.1500 க்குள் அமையலாம்.
  • 4ஜி ஆதரவு கொண்ட மொபைலாக மட்டுமல்லாமல் ஜியோ ஆப்ஸ்களும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
  • இந்த மொபைல் ஜூன் அல்லது ஜூலை மாதம் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

ரூ 1000 விலையில் ஜியோ 4ஜி ஃபீச்சர் போன் வருகை விபரம்

சீனாவின் ஃபீச்சர் போன் தயாரிப்பாளர்களிடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதற்கான தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக குறைந்த விலையில் 4ஜி ஆதரவு வசதிகளை பெற்ற மொபைலாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மொபைல் பற்றி சில மாதங்களுக்கு முன் வெளியான படங்களின் அடிப்படையில் ஜியோ ம்யூசிக் உள்பட ஜியோஆப்ஸ்களை பெற்றதாக விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மொபைலில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளுக்கு இணையான ஆப்ஸ்களையும் பயன்படுத்தும் வகையில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் 4ஜி ஆதரவு கொண்ட ஃபீச்சர் மொபைலை லாவா நிறுவனம் ரூ.3333 விலையில் லாவா 4ஜி கனெக்ட் எம்1 என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்ற நிலையில் அடுத்த சில மாதங்களில் 4ஜி ஆதரவு கொண்ட மொபைலை இந்திய தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் ரூ.2000 விலைக்கு குறைவான விலையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ 1000 விலையில் ஜியோ 4ஜி ஃபீச்சர் போன் வருகை விபரம்

ஜியோ நிறுவனத்தின் லைஃப் பிராண்டில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ள  இந்த 1000 ரூபாய் ஃபீச்சர் போன் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த மொபைல்களுடன் பன்டில் சலுகையாக ஜியோ சிம் வழங்கப்பட்டு, இதற்கு குறைந்தபட்ச 6 மாதங்கள் இலவச இணைய சேவையை ஜியோ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மொபைல் விற்பனைக்கு வந்தால் வாங்குவீர்களா ? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here