இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4ஜி இணைய சேவை வழங்குநராக விளங்கும் ஜியோ நிறுவனம் கடந்த மார்ச் 2017ல் அதிகபட்சமாக 16.48Mbps வேகத்தை பதிவு செய்து முதன்மை வகிக்கின்றது.

டாப் டக்கரு..! ஜியோ இணைய வேகத்தில் முன்னிலை

இணைய வேகம் – மார்ச்

 • அதிகபட்சமாக ரிலையன்ஸ ஜியோ 16.48Mbps வேகத்தை பதிவு செய்துள்ளது
 • இணைய வேகம் குறித்தான தகவல்கள் டிராய் மை ஸ்பீடு ஆப் வாயிலாக கணக்கிடப்பட்டுள்ளது.
 • ஜியோவின் அப்லோட் வேகமும் 3.581Mbps ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி மொபைலில் 4ஜி இணைய பயன்பாட்டின் வேகம் கனிசமாக உயர்ந்துள்ள நிலையில் தரவிறக்க வேகத்தின் அடிப்படையில் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் அதிகபட்சமாக 16.48Mbps வேகத்தை பதிவு செய்துள்ளது.

 • ஜியோ – 16.48Mbps
 • ஏர்டெல் -10.439Mbps
 • ஐடியா -12.029Mbps
 • வோடஃபோன் –  7.933Mbps

டாப் டக்கரு..! ஜியோ இணைய வேகத்தில் முன்னிலை

மார்ச் மாத அப்லோட் வேகத்தில் ஐடியா நிறுவனம் அதிகபட்சமாக 6.536Mbps வேகத்தை பதிவு செய்து முதன்மையாக விளங்குகின்றது.

 • ஜியோ – 3.581Mbps
 • ஏர்டெல் – 4.455Mbps
 • ஐடியா -6.536Mbps
 • வோடஃபோன் –  5.429Mbps

4ஜி சேவையில் ஜியோ நிறுவனம் சிறப்பான பங்களிப்பினை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தாலும் பல்வேறு இடங்களில் உள்ள நெட்வொர்க் பிரச்சனையை தீர்க்க புதிதாக டவர்களை நிறுவி வருகின்றது.

உங்கள் இணைய வேகம் குறைவாக இருக்கும் பட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள டிராய் மை ஸ்பீடு ஆப் (Trai My Speed) தரவிறக்கி இணைய வேகத்தை பதிவு சோதனை செய்து டிராய் அமைப்புக்கு அனுப்பி வைக்கலாம்.

டாப் டக்கரு..! ஜியோ இணைய வேகத்தில் முன்னிலை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here