ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராய் மைஸ்பீடு அறிக்கையின் படி மிக வேகமான 4ஜி நெட்வொர்க்காக தொடர்ந்து 7 மாதங்களாக முன்னிலையில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி

ஒரு வருடத்திற்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் காரணமாக தொடர்ந்து தொலைத்தொடர்பு துறையை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில் பீச்சர் ரக இலவச ஜியோபோன் மொபைலை வெளியிட்டுள்ளது.

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

டிராய் தனது மை ஸ்பீடு போர்டல் மற்றும் செயலி வழியாக இணைய வேகத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை செய்து வரும் நிலையில் ஜூலை மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 18.331 Mbps தரவிறக்க வேகத்தை வழங்குகின்றது. இதே காலகட்டத்தில் வோடபோன் 9.325 Mbps , ஏர்டெல் 9.266 Mbps  மற்றும் ஐடியா 8.833 Mbps  வரையிலான வேகத்தை வழங்குகின்றது.

அப்லோட் செய்யும் வேகத்தில் ஐடியா செல்லூலார் நிறுவனம் 6.292 Mbps பெற்றிருப்பதுடன், வோடபோன் 5.782 Mbps, ரிலையன்ஸ் ஜியோ 4.225 Mbps, மற்றும் ஏர்டெல் 4.123 Mbps வரை பெற்றுள்ளது.

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

3ஜி சேவையில் யார் முதலிடம்

டிராய் அறிக்கையின்படி, மை ஸ்பீடு ஆப் வாயிலாக சோதனை செயப்பட்டதில், வோடபோன் 4.319 Mbps, அதனை தொடர்ந்து ஏர்டெல் 3.852 Mbps, ஐடியா செல்லூலார் 2.766 Mbps பெற்றிருப்பதுடன், ஏர்செல் நிறுவனம் 2.356 Mbps, வேகத்துடன் பிஎஸ்என்எல் 1.903 Mbps வரை பெற்றிருப்பதாக டிராய் மதிப்பிட்டுள்ளது.

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

 

அப்லோட் வேகத்தில் வோடபோன 1.905 Mbps வேகத்துடன் முதலிடத்திலும், ஏர்டெல் நிறுவனம் 1.625 Mbps மற்றும் ஐடியா செல்லூலார் 1.540 Mbps வேகத்துடனும் ஏர்செல் நிறுவனம் 1.289 Mbps, மற்றும் பிஎஸ்என்எல் 1.105 Mbps வேகத்தை பெற்றிருக்கின்றது.

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here