முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் அறிமுகம் செய்துள்ள இலவச 4ஜி ஜியோபோன் முன்பதிவு செய்வது எப்படி ? ஜியோஃபோன் எப்பொழுது கிடைக்கும் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஜியோபோன் வாங்க முன்பதிவு

ரூபாய் பூஜ்யம் என்ற விலையில் வெளியிடப்பட்டுள்ள 4ஜி ஜியோஃபோன் முன்பதிவு செய்வது எங்கே? எப்பொழுது கிடைக்கும். போலிகளை தவிர்ப்பது எப்படி என இங்கே காணலாம்.

பரவலாக இந்திய மக்கள் அனைவரும் அறிந்த ஜியோ இலவச போனை 50 கோடிக்கு மேற்பட்ட மக்களை குறிவைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில் மொபைல் அறிமுகம் சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும் என அம்பானி அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் முதல் ஜியோ போன் ரிலையனஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் ஜியோ, லைஃப் பிராண்டு டீலர்கள் வாயிலாக சோதித்து பார்க்கும் வகையில் சோதனைக்கும் கிடைக்க உள்ளது.

முன்பதிவு ஆகஸ்ட் 24

நேற்றைய அறிவிப்பின்போது வெளியிட்டிருந்த தகவலின் அடிப்பையில் ஜியோஃபோன் ஆகஸ்ட் 24, 2017 முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளது.

எங்கே முன்பதிவு ; ஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (Myjio app) மற்றும் ஜியோ இணையதளம் (jio.com) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.

எப்பொழுது கிடைக்கும் ; ஜியோ போன் முன்பதிவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்தாலும், இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மொபைல் கட்டணம் ;- ரூ.1500 பாதுகாப்பு வைப்பு தொகை கட்டணத்தை செலுத்த வேண்டிய முறை டிஜிட்டல் மற்றும் ரீடெயிலர் வாயிலாக மொபைல் வாங்கும்போது மேற்கொள்ளலாம்.

முதல் ரீசார்ஜ் ; ஆதார் அடிப்படையில் இதற்கும் புதிய ஜியோ சிம் பன்டில் ஆப்பராக இலவசமாக வழங்கப்படலாம். அதாவது ஜியோ சிம் மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்கலாம், இதனை ஏக்டிவேட் செய்த பின்னர் முதல் ரீசார்ஜ் ரூ.153 மேற்கொள்ள வேண்டும்.

டேட்டா பிளான் ; ரூ.153 கட்டணத்தில் தினமும் 500எம்பி உயர்வேக 4ஜி டேட்டா மற்றும் அதன் பிறகு128Kbps வேக டேட்டா வழங்கப்படும். அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் இலவசமாக பெறலாம்.

ரூ. 24 கட்டணத்தில் இரு நாட்கள் மற்றும் ரூ.54 கட்டணத்தில் 7 நாட்கள் பெறலாம்.

50 லட்சம் மொபைல்கள் ; வாரம் 50 லட்சம் மொபைல்களை டெலிவரி கொடுக்கும் வகையில் மாபெரும் வரைவு திட்டத்தை ஜியோ செயல்படுத்த தொடங்கி உள்ளதால் இன்டெக்ஸ் மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யலாம் எஎன எதிர்பார்க்கப்படுகின்றது.

 ஜியோ இணையதளம் மொபைல் வருகை மற்றும் முன்பதிவை அறிந்து கொள்ள ஜியோ (jio.com) தனது அதிகார்வப்பூர்வ தளத்தில் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் வாயிலாக உறுதிப்படுத்தும் வகையில் பதிவு செய்ய வழி வகுத்துள்ளது. எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தனி நபர் மட்டுமல்ல வியாபர ரீதியாக அனுகுபவர்களுக்கு வாய்ப்பினை ஜியோ தற்போது இணைத்துள்ளது.இதனை பயன்படுத்த Business என்பதனை தேர்வு செய்யுங்கள்.

கீழுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்..

jio.com⇒keep me posted ⇒  fill your email-id and mobile pincode details

முன்பதிவு செய்த பிறகு செய்தி இவ்வாறு கிடைக்கும்.

மேலும் படிங்க — > ஜியோஃபோன் உண்மையில் இலவசமே கிடையாது..!

போலிகள் அதிகமாக உலா வர தொடங்கும் என்பதனால் அதிகார்வப்பூர்வமற்ற இணைய தளங்களில் அனுகுவதனை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.