இந்தியாவில் பீச்சர் ரக மொபைல் சந்தையில் 4ஜி சேவையுடன் கூடிய மொபைலை முதற்கட்டமாக ஜியோ வெளியிட்டதை தொடர்ந்து இன்டெக்ஸ் நிறுவனமும் வெளியிட்டுள்ளது.

இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி  Vs ஜியோபோன் : எது பெஸ்ட் 4ஜி பீச்சர் போன்

இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி Vs ஜியோபோன்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4ஜி சேவையை வழங்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் 4ஜி வசதியை பெற்ற ஜியோபோன் ரூ.1500 டெபாசிட் தொகையுடன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி  Vs ஜியோபோன் : எது பெஸ்ட் 4ஜி பீச்சர் போன்

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான இன்டெக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட 4ஜி ஆதரவு பெற்ற ஃபீச்சர் ரக மொபைல் போன் விலை ரூ.1999 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்மார்ட் ஃபீச்சர் போன் என இன்டெக்ஸ் அறிமுகம் செய்ய உள்ள 4ஜி ஆதரவு பெற்ற மொபைல் மாடலின் நுட்ப விபரங்களும்,ஏறக்குறைய ஜியோபோனில் உள்ள அதே அம்சங்களை பெற்றுள்ளது. ஜியோபோனை போன்று ஜியோ 4ஜி சிம் மட்டுமல்லாமல் எந்த நெட்வொர்க்கின் சேவையையும் பயன்படுத்தலாம்.

இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி  Vs ஜியோபோன் : எது பெஸ்ட் 4ஜி பீச்சர் போன்

இரு மொபைல்களுமே  2.4 அங்குல QVGA திரையுடன் 512 எம்பி ரேம் பெற்றதாக கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகின்ற இதில் 2000mAh பேட்டரி உடன் 2 மெகாபிக்சல் விஜிஏ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இரு மொபைல்களுமே 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 32ஜிபி வரை நீட்டிக்கும் வகையிலான மைக்ரோ எஸ்டி அட்டை பொருத்தும் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோஃபோனை போல அல்லாமல் ஜியோ ஆப்ஸ், ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்துவது கட்டாயம், 90 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் ஆகிய நிபந்தனை இல்லாமல் இன்டெக்ஸ் டர்போ பிளஸ் 4ஜி மொபைலில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட 4ஜி சேவைகளையும் பயன்படுத்தலாம்.

இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி  Vs ஜியோபோன் : எது பெஸ்ட் 4ஜி பீச்சர் போன்

ஆனால், ஜியோஃபோன் மூன்று வருடங்களுக்கு பிறகு ரூ.1500 டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும், ஆனால் இன்டெக்ஸ் மொபைல் போன் இலவசம் அல்ல, முழு தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும்.

காத்திருங்கள்

இரு மொபைல்களின் முக்கிய விபரங்களுமே நமது நாட்டின் 71 சுதந்திர தினத்தன்று மொபைல் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வெளியாகும். இதுதவிர ஐடியா நிறுவனம் ஜியோபோன் போல அல்லாமல் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்கும் 4ஜி ஃபீச்சர் மொபைலை ரூ.2500 விலையில் வெளியிட உள்ளதால், மேலும் சில வாரங்கள் காத்திருங்கள்.

இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி  Vs ஜியோபோன் : எது பெஸ்ட் 4ஜி பீச்சர் போன்

மேலும் போன் செய்திகள் இங்கே படிக்கலாம் தொடர்ந்து எங்களை பேஸ்புக்கில் பின்தொடர fb.com/gadgetstamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here