ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அடுத்த இலக்கு ஃபீச்சர் போனை பயன்படுத்தப்படுகின்ற 15 கோடி மக்களை குறிவைத்து ஜியோ 4ஜி பட்டன் போனை அறிமுகம் செய்ய உள்ளது.

ஜியோ 4ஜி ரகசியம்

இந்தியாவின் டெல்காம் துறையின் முகப்பை மாற்றிய பெருமை பெற்ற ரிலையன்ஸ் குழுமங்களில் ஒன்றான ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் அடுத்த இலக்கு 150 மில்லியன் அதாவது 15 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களால் பயன்படுத்தப்படுகின்ற ஃபீச்சர் மொபைல் சந்தையில் 4ஜி  வோல்ட்இ சேவையை பெற்ற ஃபோனை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற இந்நிறுவனம் அடுத்தகட்டமாக ரூ. 500 முதல் ரூ.1500 விலைக்குள் 4ஜி VoLTE ஆதரவினை பெற்ற ஃபீச்சர் போனை அறிமுகம் செய்ய உள்ளதால் 15 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு ஏற்ற வகையில் வரம்பற்ற இலவச அழைப்புகள் உள்பட சவாலான விலையுடன் கூடிய டேட்டா பேக்குகளை பயன்படுத்தும் வகையில் ஜியோவின் ஆப்ஸ்களை பெறும் வகையில் பன்டில் ஆஃபர் போனை வடிவமைக்க உள்ளது.

ரூ. 500 க்கு 4ஜி போன்

கடந்த 2017 நிதி ஆண்டில் இந்தியாவில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட மொபைல்களின் எண்ணிக்கையில் ஃபீச்சர் போன் எண்ணிக்கை மட்டுமே 13.6 கோடி ஆகும். ஆனால் இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் எண்ணிக்கை 11.3 கோடி ஆகும். நமது நாட்டின் மொத்த மொபைல் பயனாளர்களில் 50 கோடிக்கு அதிகமான மக்களால் சாதாரன பட்டன் உள்ள 2ஜி சேவை மொபைல்களை பயன்படுத்துவதாக CLSA ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

தற்போது சராசரியாக 70 சதவிகித ஃபீச்சர் மொபைல் போன் பயனாளர்கள் வருவாய் மாதம் ரூ. 50 அல்லது அதற்கு குறைவாக உள்ளது. இதனை ஜியோ ரூ.150-180 வரை அதிகரிக்க திட்டமிட்டுயிருப்பதுடன் மொத்த வருவாயில் 15-17 சதவிகித பங்களிப்பாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

2ஜி சேவையை பயன்படுத்தி வரும் பயனார்கள் மற்றும் ஃபீச்சர்போன் விரும்பிகளை குறிவைத்துள்ள ஜியோ ரூ. 500 க்கு அதிகமான ஆனால் ரூ. 1500 க்கு குறைவான விலையில் 4ஜி வோல்ட் ஃபீச்சர் போனை வெளியிடும் பட்சத்தில் மூன்று மாதம் இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா சலுகையுடன் நிச்சியமாக வழங்கும் என்பதனால் ஃபீச்சர் போன் சந்தையை ஜியோ தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதுடன் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு துறையில் அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகள் முழுமையாக அடுத்த சில ஆண்டுகளில் மறைய தொடங்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் இந்தியா நிறுவனம் இந்த வருடத்தில் ஜியோஃபைபர் பிராட்பேண்ட், ஜியோ டிடிஎச் மற்றும் ஜியோ ஹோம் போன்றவற்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஜியோ அறிவித்திருந்த பல்வேறு சலுகைகள் மற்றும் ஆஃபர்கள் ஏறக்குறைய இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ளதால் தனது பிளான்களை மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக மீண்டும் தன் தனா தன் பிளானை ரூ. 399 கட்டணத்தில் 84 நாட்களுக்கு வழங்கியுள்ளதை நாம் முன்பே வெளியிட்டிருந்தோம்.