இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கோரிய அடிப்படை விலை என்ற கோரிக்கை தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் டிராய் அமைப்பு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அடிப்படை கட்டணம் இருக்கா ?

ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கோரிய பேஸ் ரேட் எனப்படுகின்ற குறைந்த பட்ச கட்டணத்தை அழைப்புகளுக்கு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டிராய் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஐடியா செல்லுலார் அறிக்கை ஒன்றை டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த கூட்டத்தொடரில் சமர்பித்திருந்தது. அதில் குறைந்த பட்ச விலையை அழைப்புகளுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும், என வலியுறுத்தும் விதமான அறிக்கையை அளித்திருந்தது.

இதற்கு, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் போன்ற மற்ற டெலிகாம் நிறுவனங்களும் ஆதரவளித்த நிலையில், ஜியோ மட்டும் இணைப்பு புள்ளிகள் எனப்படும் இன்டர்கனெக்ட் பயன்பாட்டு தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி ஜியோ கோரி வரும் நிலையில் முக்கிய முடிவாக தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும், குறைந்த பட்ச ஆதரவு விலை என்ற பேச்சுக்கே இடமில்லை இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஜியோ பயனர்கள் வாழ்நாள் முழுவதும், இலவச அழைப்புகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். இது போன்ற சேவைக்கு மற்ற நிறுவனங்களும் இனி மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிங்க ; ஜியோபோன் வாங்க முன்பதிவு செய்வது எப்படி ?