ரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் போன்களில் வாட்ஸ்அப் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், தங்கள் போன்களான KaiOS அடிப்படையாக கொண்ட ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2-வில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுட்மின்றி அத்தியாவசியமான அப்ளிகேஷன்களான வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியுப் மற்றும் கூகிள் மேப் ஆகியவைகளை பெற எந்த அப்கிரேடும் செய்ய தேவை இல்லை.

இதை எப்படி டவுன்லோட் செய்வது?

ஜியோ ஆப்ஸ்டோர் மூலம் வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது அப்ளிகேஷன் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு வரும் 20 தேதி முதல் கிடைக்கும். மேலும் ஜயோ போன் குறித்த தகவல்களை பெற்று கொளல் சிறப்பு ஹெல்ப்லைன் எண்ணாக 1991 என்ற தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த புதிய அப்ளிகேஷன்கள், கீபேடு உடன் கூடிய போன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இதில் வாய்ஸ் ரெக்கார்டிங் வசதியும் உள்ளது. பயனாளர்கள் தங்கள் வாட்ஸ்அப் நம்பரை சோதனை செய்து கொண்டு, வாட்ஸ்அப் சாட்டிங்கை குழுவாகவோ அல்லது தனி நபருடனோ செய்ய முடியும்.

இந்தியாவில் வசிக்கும் மில்லியன் கணக்கான ஜியோ போன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை தற்போது பயன்படுத்தி கொள்ள முடியும் என்று வாட்ஸ்அப் உயர் அதிகாரி கிறிஸ் டேனியல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், KaiOS களுக்காக புதிய அப்ளிகேஷன் ஒன்று உருவகப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ போன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை பயன்படுத்தி புதிய அனுபவத்தை பெறலாம் என்றும் கூறியுள்ளார்.