ஜியோ மீட்: 100 நபர்களுடன் வீடியோ மீட்டிங்கிற்கு ஆப் அறிமுகம்

தற்போதை சூழ்நிலையில் வீடியோ கான்ஃபிரன்சிங் முறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஜியோ மீட் என்ற புதிய சேவையை ரிலையன்ஸ் ஜியோ அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூம், கூகுள் மீட் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் 100 நபர்களுடன் வீடியோ மீட்டிங் செய்யலாம் என அறிவித்துள்ளது.

கோவிட்-19 பரவலால் சமுக இடைவெளி கட்டாயமாகியுள்ளதால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தற்போது ஆன்லைன் வீடியோ கானஃபிரன்ஸ் மூலமாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில் ஜூம் சேவை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது. இந்நிலையில் பிரபலமான இந்திய டெலிகாம் நிறுவனம் ஜியோ தனது சார்பாக வெளியிட்டுள்ள செயலியில் பல்வேறு சிறப்புகளுடன் உயர்தர ஹெச்டி வீடியோ மீட்டிங்கை மேற்கொள்ள வழி வகுத்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் தற்போது ஜியோமீட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் ஏற்படுத்தப்படுகின்ற லிங்கை நீங்கள் கணினியிலும் எந்த ஒரு கூடுதல் மென்பொருள் இல்லாமலும் பிரவுசர் வாயிலாக வீடியோ கான்ஃபிரன்ஸை மேற்க்கொள்ளலாம்.

JioMeet-ல் வீடியோ கான்ஃபிரன்ஸ் செய்வது எப்படி?

1: உங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள Google Play Store அல்லது App Store க்குச் சென்று JioMeet ஆப் தேடுங்கள்.

2: ரிலையன்ஸ் கார்ப்பரேட் ஐடி பார்க் லிமிடெட் (Reliance Corporate IT Park Limited) மூலமாக வெளியிடப்பட்ட செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்.

3: ஆப்பினை பதிவிறக்கி, அது நிறுவப்படும் வரை காத்திருக்கவும்.

4: பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், பதிவுசெய்வது எளிதானது. உங்கள் மொபைல் எண், முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிட வேண்டும்.

5: சரிபார்ப்புக்காக ஜியோ மீட் OTP-யை அனுப்பும், அதனை உறுதி செய்த பின்னர், நீங்கள் வீடியோ கான்ஃபரன்சிங் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.