விலையில்லா 4ஜி ஆதரவினை பெற்ற ஃபீச்சர் மொபைல் என அறிவிக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோபோன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் கொண்டு இயக்குப்படுவதாக உறுதியாகியுள்ளது.

ஜியோபோன் பிராசஸர்

குவால்காம் இந்தியா பிரிவு வெளியிட்டுள்ள ட்விட்டர் ட்விட்டில் ரிலையன்ஸ் ஜியோபோன் இயக்குப்படுவது ஜியோபோன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே இந்த சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைல் அதிகபட்சமாக 1.1GHz இரட்டை கோர் சிபியு கொண்டுள்ள குவால்காம் 205 சிப்செட் அதிகபட்சமாக கேமரா துறையில் 3 மெகாபிக்சல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா, 480 பிக்சல் கொண்ட வி.ஜி.ஏ. டிஸ்ப்ளே, 720 பிக்சல் திறன் பெற்ற எச்டி வீடியோ ஸ்டிரீமிங் செய்யும் திறனுடன் லினக்ஸ் சார்ந்த இயங்குதளத்தை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட சிப்செட் ஆகும்.

மேலும் இந்த பிராசஸர் 4ஜி எல்டிஇ உடன், 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க்களையும், 802.11a/b/g வை-ஃபை , ஜிபிஎஸ் போன்றவற்றின் ஆதரவினை கொண்டிருக்கும். இந்த சிப்செட் சிறப்பான பேட்டரி பெர்ஃபாமென்ஸ் கொண்டதாகும்.

வரவுள்ள ஜியோஃபோனில் ஸ்னாப்டிராகன் X5 LTE திறன் பெற்றிருப்பதனால் இதன் தரவிறக்கம் வேகம் 4ஜி சேவையில் 150mbps மற்றும் தரவேற்ற வேகம் அதிகபட்சமாக 50 Mbps வரை கிடைக்கப் பெறலாம்.

2.4 அங்குல QVGA திரையை பெற்ற ஜியோஃபோன் நிச்சயமாக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக ஜியோபோன் பற்றி விபரத்துக்கு இங்கே க்ளிக் பன்னுங்க.!