4 புதிய ஹெச்டி மூவி சேனல்களை பெற்ற ஜியோ டிவி

30 கோடிக்கு அதிகமான பயனாளர்களை பெற்ற ஜியோ நிறுவனத்தின் , ஜியோ டிவி ஆப் செயலியில் புதிதாக நான்கு ஹெச்டி திரைப்பட சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை ஜியோ தமிழ் ஹிட்ஸ் ஹெச்டி, ஜியோ தெலுங்கு ஹிட்ஸ் ஹெச்டி, ஜியோ பாலிவுட் பிரீமியம் ஹெச்டி மற்றும் ஜியோ பாலிவுட் கிளாசிக் ஹெச்டி போன்றவையாகும்.

ஜியோ நிறுவனத்தின் ஜியோ டிவி செயலி மூலம் எண்ணற்ற நேரலை மொழி வாரியான தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஜியோ டிவி ஆப்

சமீபத்தில் ஜியோ டிவி ஆப்பில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்கப்பட்டது. இந்த மோடின் மூலம் பயனாளர்கள் ஜியோ டிவி ஆப்பினை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாட்ஸ் ஆப், இணைய உலாவல், மற்ற ஆப்களை காண வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்கு புதிய ஹெச்டி சேனல்கள் பயனாளர்களுக்கு மிக சிறப்பான வகையில் பல்வேறு திரைப்படங்களை கண்டுகளிக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது.

ஜியோ நிறுவனம், கடந்த நிதி ஆண்டின் இறுதி காலண்டில் சுமார் ரூ.840 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளது. மேலும் மிக வேகமாக அதாவது வர்த்தக ரீதியான பயன்பாட்டை தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் 30 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது.