பால்வெளியில் வலம் வருகின்ற கோள்களில் மிகவும் வெப்பமான சூரியனை விட இரு மடங்கு வெப்பமான மற்றும் பெரிதான கிரகம் KELT-9b கண்டறியப்பட்டுள்ளது. KELT-9b பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக 4,300 டிகிரி செல்சியஸ் (7300F) வரை எட்டலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

KELT-9b

அமெரிக்காவின் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்காட் கவடி என்பவரால் முதன்முறையாக கண்டறியப்பட்ட இந்த கெல்ட்-9பி கிரகம் மிகப்பெரியாக கோளாக கருதப்படுகின்ற வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரிதாக அமைந்துள்ளது.

இந்த கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக 4,300 டிகிரி செல்சியஸ் (7300F) வரை எட்டலாம் என அறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்தை அரிசோனா மற்றும் சுதர்லேண்ட் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள மிகப்பெரிய கெலட் ரக ராட்சத டெலஸ்கோப் வாயிலாகவே காண முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பால்வெளியில் காணப்படுகின்ற கோள்களிலே மிக சூடான கிரகமாக அறியப்படுகின்ற கெல்ட்-9பி கிரகத்தின் ஒருபுறம் மிக இருள் சூழ்ந்த பகுதியாக மற்றொரு புறம் புறஊதாக்கதிர்களையும் (UV rays) கொண்டது. மற்ற நட்சத்திரங்களால் கெல்ட் 9 பி கிரகம் சூழப்பட்டுள்ளது.  இந்த கிரகத்தின் ஒரு பகுதியில் நீர், கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் இருந்தாலும், மூலக்கூறுகள் கிரகத்தின் மற்றொரு பகுதியில் உள்ள புறஊதாக்கதிர்கள் காரணமாக நிலையாக இல்லை என நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை வாயிலாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.