கேரளா பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உதவும் நோக்கில் டேட்டாகளை இலவச வழங்க ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

ஏர்டெல் நிறுவனம் தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் கணக்கில் 30ரூபாய் மதிப்பு கொண்ட டாக்டைம் அளிக்க உள்ளது. மேலும் ஏழு நாட்களுக்கு ஒரு ஜிபி டேட்டா, வரும் 19ம் தேதி வரை எஸ்டிடி மற்றும் லோக்கல் கால்கள் இலவசம் என்று தெரிவித்துள்ளது. வோடாபோன் நிறுவனமும் 30 ரூபாய் டாக்டைம் , ஒரு ஜிபி டேட்டா ஆகியவற்றை அளிக்கிறது.

ஜியோ நிறுவனம், அன்லிமிடெட் கால்கள் மற்றும் டேட்டாவை ஒரு வார காலத்திற்கு இலவமாக வழங்குகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறவினர் மற்றும் நண்பர்களுடன் டச்சில் இருக்க முடியும்.

மற்றொரு தொலை தொடர்பு நெட்வொர்கான ஐடியா நிறுவனம் 10 ரூபாய் டாக்டைம், ஒரு ஜிபி டேட்டா வை ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இதே போன்று பிஎஸ்என்எல் நிறுவனமும், நாள் ஒன்றுக்கு 20 நிமிடம், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவை அளிக்க தொடங்கியுள்ளது. .