வின்டோஸ் கணினிகளை தொடர்ந்து தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைத்து லீக்கர்லாக்கர் (LeakerLocker) என்ற பெயரில் உங்கள் தகவல்களை திருடுகின்ற ரேன்சம்வேர் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைலில் லீக்கர்லாக்கர் ரேன்சம்வேர் தாக்குதல்..!

லீக்கர்லாக்கர்

வின்டோஸ் கணினிகளில் வானாக்கிரை மற்றும் பெட்டியா அல்லது கோல்ன்ஐ போன்றவற்றின் மாபெரும் தாக்குதலை தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயனாளர்களை குறிவைத்து லீக்கர் லாக்கர் என்ற பெயரில் ரேன்சம்வேர் தாக்குதல் தொடங்கியுள்ளதாக ஆன்டி வைரஸ்’ மற்றும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபே (McAfee) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த லீக்கர்லாக்கர் ரேன்சம்வேர் செயல்படும் முறை எவ்வாறு ? உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடுவதுடன், உங்கள் இணைய உலாவல் வரலாறு உள்ளிட்ட பல்வேறு தனிநபர் விபரங்களை சேகரித்து கொண்டு மொபைலை என்கிரிப்ட் செய்து விடுகின்றது.

அவ்வாறு என்கிரிப்ட் செய்த தகவல்களை உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் பகிர்ந்து கொள்ள உள்ளதாக மிரட்டுகின்றது. இதனை தவிர்க்க அமெரிக்கா டாலர் 50 கேட்டு மிரட்டுவதாக மெக்க்ஃபே தெரிவிக்கின்றது.

ஆண்ட்ராய்டு மொபைலில் லீக்கர்லாக்கர் ரேன்சம்வேர் தாக்குதல்..!

image -mcAfee

இந்த ரேன்சம்வேர் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்களான Wallpapers Blur HD மற்றும் Booster & Cleaner Pro ஆகிய ஆப்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு ஆப்களையும் மொத்தமாக 15,000 ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தரவிறக்கி உள்ளதால் மேலும் பலருக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என மெக்கஃபே எச்சரித்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் வெளியிடங்களில் அதிகார்வப்பூர்வமற்ற ஆப்களை தரவிறக்குவதனை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here