ரூ.10,999 ஆரம்ப விலையில் லெனொவோ கே8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் டூயல் கேமரா வசதியுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3ஜிபி மற்றும் 4ஜிபி என இரு விதமான ரேம் வசதியில் கிடைக்க உள்ளது.

லெனொவோ கே8, கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

லெனொவோ K8 ப்ளஸ்

மிகவும் போட்டிகள் நிறைந்த பிரிவில் வெளியிடப்பட்டுள்ள லெனொவா கே8, கே8 பிளஸ் மாடலில் 3ஜிபி மற்றும் 4ஜிபி என இருவிதமான ரேம் வகையில் 5.2 அங்குல திரையுடன் கிடைக்கப் பெறுகின்றது.

டிசைன் & டிஸ்பிளே

மெட்டல் பாடியுடன் கூடிய 5.2 அங்குல முழு ஐபிஎஸ் திரையுடன் 1080p தீர்மானத்தை கொண்டதாக உள்ள இந்த மொபைலில் வேனாம் கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினை பெற்றிருக்கின்றது.

பிராசஸர் & ரேம்

2.6ஜிகாஹெர்ட்ஸ் டிகா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி25 பிராசஸர் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைலில் 3GB ரேம் கொண்டிருக்கின்றது. இதன் உள்ளடங்கிய சேமிப்பு 32ஜிபி மற்றும் மைக்ரோ எஸ்டிஅட்டை வழியாக 128ஜிபி வரை அதிகரிக்கலாம்.

4ஜிபி ரேம் பெற்ற மாடல் லெனோவோ கே8 பிளஸ் ஹாலிடே எடிசன் மாடல் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.

லெனொவோ கே8, கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

கேமரா துறை

மிகவும் தெளிவான படங்க்களை பெறும் வகையில் கே8 பிளஸ் மொபைலில் பின்புறத்தில் அமைந்துள்ள டூயல் கேமரா பிரிவில் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் பெற்ற இரட்டை எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் கிடைக்கின்றது.

முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

லெனொவோ கே8, கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் 7.1 இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்ற கே பிளஸ் கருவியை இயக்க 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மற்றவை

4ஜி  எல்இடி, வைஃபை, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், ப்ளுடூத் 4.1, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை பெற்றுள்ளது.

லெனொவோ கே8, கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

விலை

வருகின்ற செப்டம்பர் 7 முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் லெனோவா கே8 பிளஸ் மொபைல் விலை ரூ.10,999 ஆகும்.

லெனொவோ கே8, கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here