லெனோவா பிராண்டில் புதிதாக 10,000mAh திறன் பெற்ற பவர்பேங்க் ரூபாய் 1,299 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவா MP1060 ப்ளிப்கார்டில் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளது.

லெனோவா பவர்பேங்க்

முந்தைய மாடலை விட விலை குறைக்கப்பட்ட புதிய பவர்பேங்க் மிக சிறப்பான செயல்திறனுடன் கூடியதாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது.

லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பவர்பேங்க் 3.7V கொண்ட 10,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்டதாகவும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் பெற்ற மொபைல், டேப்ளெட் தவிர டிஜிட்டல் கேமரா போன்றவற்றுடன் கேம் கருவிகளையும் சார்ஜ் செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 1299 விலையில் கிடைக்கின்ற இந்த பவர்பேங்க் கருவியுடன் மைக்ரோ யூஎஸ்பி மற்றும் மேனுவல், வெடிக்கும் தன்மை உள்ளிட்ட 11 விதமான பாதுகாப்பு அம்சங்களை லெனோவா MP1060 பெற்றுள்ளது.