உலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா

இந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் லெனோவா நிறுவனம் உலகளவிய பிசி மார்க்கெட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.

2018ம் ஆண்டில் மூன்றாம் காலாண்டில் லெனோவா நிறுவனத்தின் உலகளவில் பிசி ஏற்றுமதி மொத்தமாக 67.2 மில்லியன் யூனிட்டாக உள்ளது. இதன் மூலம் குளோபல் மார்க்கெட் ஷேரில் 24 சதவிகிதமாகும். இந்த மூலம் பிசி மார்க்கெட்டில் லெனோவா நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து 22 சதவிகித இடத்தை பிடித்து ஹெச்பி நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து கார்ட்னர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிசி ஏற்றுமதி 2018ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உயர்ந்துள்ளது. மேலும் ஏற்றுமதி 0.1 சதவிகிதம் y-o-y அளவில் உயர்ந்துள்ளது.

இருந்தபோதும், அமெரிக்க மார்க்கெட்டில், ஹெச்பி மீண்டும் 30 சதவிகித மார்க்கெட் ஷேர்-ஐ பெற்றுள்ளது.. இதை தொடர்ந்து லெனோவோ 25.9 சதவிகிதம் மற்றும் டெல் நிறுவனம் 15 சதவிகித மார்க்கெட் ஷேர்களை பெற்றுள்ளது.

2018ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மார்க்கெட் ஷேரில் முதல் ஐந்து இடத்தில் உள்ள நிறுவனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, லெனோவா, ஹெச்பி, டெல், ஏசர் குழு, மற்றும் ஆப்பிள். கார்ட்னர் நிறுவனம் அறிக்கையின் படி, அமெரிக்காவில் முதல் ஐந்து இடத்தில் உள்ள நிறுவனங்களாக, ஹெச்பி, டெல், லெனோவோ, ஆப்பிள் மற்றும் மைரோசாப்ட் என்று பட்டியலிட்டுள்ளது.

Recommended For You