மொபைல் ஆதார் ஆப் அதாவது எம்ஆதார் ஆப் (maadhar app) என்ற புதியதொரு செயலியை ஆதார் நிறுவனமான யூஐடிஏஐ வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலில் எம்-ஆதார் ஆப் பெறுவது எவ்வாறு ? - mAadhaar

எம்ஆதார் ஆப்

எம்ஆதார் ஆப் ஆரம்பகட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் வாயிலாக உங்களது ஆதார் விபரங்களை பையோ-மெட்ரிக் முறையில் தனிநபர் விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதனை தடுக்கும் வகையில் இந்தச் செயலியில் பையோமெட்ரிக்  பூட்டு வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியில் உள்ள பையோமெட்ரிக் சேவையினை இயக்கிய பிறகு பூட்டைத் திறக்கும் வரை வேறு எவராலும் உங்கள் விவரங்களைப் பெற முடியாது.

உங்கள் மொபைலில் எம்-ஆதார் ஆப் பெறுவது எவ்வாறு ? - mAadhaar

இந்த செயலியை பயன்படுத்துவதற்கு ஒரு முறை கடவுச்சொல்லை குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களது சயவிபரங்களை மாற்றும் வகையிலான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

ரயிலகளில் பயணம் மேற்கொள்பவர்கள் எம்ஆதார் அடையாள ஆவணமாக பயன்படுத்த ரயில்வே அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் mAadhaar என்ற மொபைல் ஆப் மூலம் ஆதார் அட்டையை காண்பிக்கலாம் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா நிலையில் இருந்த இந்த செயலி விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த செயலியை தரவிறக்க முகவரி  பின் வருபாறு.   https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.mAadhaarPlus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here