இந்தியாவில் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலே தயாரிக்கும் உரிமையை டெல்லியை சேர்ந்த ஆப்டைமஸ் இன்ஃபிராகாம் பெற்றுள்ளது. இந்தியாவிலே பிளாக்பெர்ரி மொபைல் களை தயாரித்து விற்பனை , சர்வீஸ் போன்ற சேவைகளை ஆப்டைமஸ் மேற்கொள்ள உள்ளது.

பிளாக்பெர்ரி ரசிகர்களுக்கு நல்ல செய்தி - மேக் இன் இந்தியா

பிளாக்பெர்ரி மொபைல்

பிளாக்பெர்ரி நிறுவனத்தின் புதிய பிராண்டு உரிமையாளர்களான டிசிஎல் மற்றும் இந்தோனேசியா PT பிளாக்பெர்ரி Merah Putih நிறுவனங்களிடம் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு தயாரிப்பு உரிமை , விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வழங்கும் உரிமையை ஆப்டைமஸ் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் நேபால் , இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு உரிமையை பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக பிளாக்பெர்ரி பாதுகாப்பு சேவைகளையும் வழங்க உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிளாக்பெர்ரி நிறுவனம் இந்திய சந்தை எங்களுக்கு மிக முக்கியமானதாகும். எங்களுடைய புதிய கூட்டணி வாயிலாக மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக செயல்படுவதினால் மிக சிறப்பான கட்டுமானத்தை கொண்டுள்ள ஆப்டைமஸ் வாயிலாக நல்லதொரு வரவேற்பினை பெறும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்டைமஸ் இன்ஃபிராகாம் நிறுவனத்தின் தலைவர் அசோக் குப்தா கூறுகையில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் பிளாக்பெர்ரி ஆண்ட்ராய் மொபைல்கள் வாயிலாக சந்தையில் சிறப்பான சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதற்கட்டமாக பிளாக்பெர்ரி DTEK60 ரூபாய் 46,990 விலையிலும் மற்றும் பிளாக்பெர்ரி DTEK50 ரூபாய் 21,990 விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here