குர்கானைச் சேர்ந்த ஷிவ் குமார் என்பவர் தனது ஆக்சிஸ் வங்கி கணக்கிலிருந்து 4.80 லட்சத்தை ஆன்லைன் மோசடி வாயிலாக இழந்துள்ளார்.

ஆன்லைன் மோசடி

குர்கான் பகுதியைச் சேர்ந்த ஷிவ் குமார் என்பவரின் ஏர்டெல் சிம் கார்டு பிப்ரவரி 14ம் முதல் வேலை செய்யாமல் பிளாக் ஆகியுள்ளது. ஆனால் இவருடைய ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்கிற்கு 4.80 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் பண பரிவர்த்தனை வாயிலாக வேறு யாரோ பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 24 வரையிலான இடைப்பட்ட இரு நாட்களில் மாற்றியுள்ளனர்.

குமாரின் மாதந்திர சம்பள பெற ஆக்சிஸ் வங்கி கணக்கிலிருந்து இணைக்கப்பட்டிருந்த சிம் கார்டு பிளாக் ஆனதை தொடர்ந்து அவர் ஏர்டெல் அலுவலகத்தில் அளித்த புகாரினை தொடர்ந்த அந்த ஏர்டெல் சிம் கார்டு இயங்க தொடங்கியதே இரண்டு வாரத்துக்கு பிறகு அதாவது மார்ச் முதல் வாரத்தில் ஆனால் அவருடைய எந்த அனுமதி இல்லாமல் பிப்ரவரி 22 முதல் 24 வரையிலான இரு நாட்களுக்குள் IMPS/RTGS வழியாக 4 லட்சத்து 80  ரூபாயை மற்றொரு ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை பணத்தை டிரான்ஸ்ஃபெர் செய்யும் பொழுதும் ஓடிபி எனப்படுகின்ற ஒரு முறை பாஸ்வோர்டு வழங்கப்படுவது உண்டு ஆனால் சிம் பிளாக் செய்யப்பட்டிருந்த காலத்தில் ஒடிபி எவ்வாறு பெறப்பட்டது, யார் டிரான்ஸ்பெர் செய்தார்கள் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

ஆனால் இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி 419 (ஏமாற்றுவது) மற்றும் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 66 சட்டப்பிரிவு (கணினி தொடர்பான குற்றங்கள்) மற்றும் 66 டி (கணினி பயன்படுத்தி ஏமாற்றுதல்) போன்ற ஐடி சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.