தகவல் திருட்டு தொடர்பாக மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்,  சிறப்பான முறையில் ஃபேஸ்புக் நிறுவனத்தை முன்னெடுத்து செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு எங்களுக்கு தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க்

அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தி வெற்றி பெற செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் கடுமையான விமர்சனம் எழுந்தது.

சமீபத்தில் ஃபேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் , சுமார் 87 மில்லியன் , அதாவது 8 கோடியே 70 லட்சம் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இவற்றில் 70.8 மில்லியன் (81 சதவீதம்) அமெரிக்க நாட்டவர்களின் பேஸ்புக் கணக்குகள் ஆகும்” இதனை தொடர்ந்து  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 1.1 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7 -வது இடத்தில் உள்ளது. சுமார் 562,455 இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சர்ச்சையால் குறைந்தபட்ச காலத்தில் சுமார் 3 லட்சம் கோடி வரையிலான இழப்பினை சந்தித்த இந்நிறுவனம் , தொடர்ந்து கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இன்றைக்கு இது தொடர்பாக மார்க் பேசுகையில், எனக்கு இன்னொரு வாய்ப்பை கொடுங்கள் “என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இது மிகப்பெரிய இது என் தவறு, இந்த தவறுக்கு நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சிறியதாக யாரென்று தெரியாமல் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் இன்று கோடிகணக்கான மக்களை ஒன்றிறைக்கும் சமூக வலைதளமாக விளங்கி வரும் சூழ்நிலையில், மிகப்பெரிய தகவல் திருட்டால் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு தலைகுனிவே ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பை கோரியுள்ளார்.