சமூகத்தை புரட்டி போடும் வல்லமை கொண்ட இணையதளத்தை உருவாக்கிய பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க், இன்று 34 வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார்.

வாழ்த்திட்டிங்களா..! யாருக்கு ஃபேஸ்புக் ஓனருக்கு #HBDMarkZuckerberg

மார்க் சக்கர் பெர்க்

உலகின் முன்னணி சமூக வலைதளமாக வலம் வருகின்ற பேஸ்புக் தளத்தை மார்க் 2004 ஆம் ஆண்டில் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு மே 14ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஓயிட் பிளைன்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேர்மன், தலைமை செயல் அதிகாரி, இணை நிறுவனர் என இயங்கி வரும் மார்க் எல்லியாட் ஜக்கர்பெர்க் தந்தை பெயர் எட்வர்டு ஜக்கர்பெர்க் மற்றும் தாய் பெயர் கரேன் கெம்பனெர் ஆகும்.

2004, பிப்ரவரி 4,ம் தேதி ஹார்வர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார் மார்க் ஜக்கர்பெர்க் , தற்பொழுது உலகின் 5வது பெரும் பணக்காரர்ராக விளங்குகிறார். தற்போதைய அவரது சொத்து மதிப்பு 58.6 பில்லியன் டாலர் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here