செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதராங்கள் உள்ளதா என ஆராய்ந்து வருகின்ற நாசா ஆய்வில் புதிதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரக புற்றுநோய்
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என ஆராய்ந்து வரும் நாசா விஞ்ஞானிகள் ஆய்வில் செவ்வாய் கிரகம் பற்றி பலவேறு விதமான தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.
கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் வாயிலாக ஆராய்ந்து வருகின்ற நாசா வெளியிட்டுள்ள புதிய ஆராய்ச்சி முடிவில் விண்வெளிக்கு சென்ற வீரர்களின் உடல்நலம் குறித்தான ஆய்வில் கடுமையான கதிர்வீச்சு நோய்கள், புற்றுநோய், கண்புரை, மைய நரம்பு மண்டலம் பாதிப்புகள் மற்றும் இரத்த ஓட்ட நாளங்களிலும் நோய் பாதிப்பு ஏற்படலாம் என தெரிய வந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பூமியை விட 1000 மடங்கு கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் இவை புற்றுநோய் உருவாக்கும் தன்மையுடையது என தெரிவித்துள்ளனர்.