இன்றை கூகுள் தேடுதல் இயந்திரத்தின் முகப்பில் காட்சி தருகின்ற மார்ஷெல் மெக்லான் அவர்களின் 106வது பிறந்த நாளை கூகுள் டூடுல் இன்று கொண்டாடுகின்றது.

கூகுள் டூடுல் : உலகத்தை கிராமம் என அழைத்த மார்ஷெல் மெக்லான்

யார் இந்த மார்ஷெல் மெக்லான்

இன்றைய இணையம் வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே இனையம் வரும் என கணித்த நிபுனரான கனடாவை சேர்ந்த பேராசிரியர் மார்ஷெல் மெக்லான்  அவர்களின் பிறந்த தினம் இன்று. ஜூலை 21- 1911 ஆகும். 1960 காலகட்டத்தின் மிகச் சிறந்த தத்துவவாதி. ஊடக கோட்பாடு, விளம்பர மற்றும் தொலைக்காட்சி துறைகளில் நிகழ உள்ள மிகப்பெரிய மாற்றங்கள் குறித்து கணித்தவர் ஆவார்.

கூகுள் டூடுல் : உலகத்தை கிராமம் என அழைத்த மார்ஷெல் மெக்லான்

உலகத்தை முதன்முறையாக global village என்ற வார்த்தையால் தனது The Gutenberg Galaxy (1962) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டார். அதாவது ஒரு கிராமம் போல இந்த பரந்து விரிந்த உலகம் சுருங்கிப் போகும் என அன்றைக்கே கணித்தவர் ஆவார். 60 மற்றும் 70 களில் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு முறை எதிர்கால மாற்றங்கள் குறித்து பேசி வந்துள்ளார்.

கூகுள் டூடுல் : உலகத்தை கிராமம் என அழைத்த மார்ஷெல் மெக்லான்

இவருடைய கோட்பாடுகளை கொண்டே கூகுள் டூடுல் 5 முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை நெருப்பை சுற்றி அமர்ந்திருக்கும் படம், அதன் பிறகு எழுத்துத் துறை, அதனை தொடர்ந்து மிகப்பெரும் உற்பத்தி இதற்கு கார் உற்பத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அதனை தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் தற்போது உள்ள எலக்ட்ரானிக் யுகத்தை மையப்படுத்தியுள்ளது.

கூகுள் டூடுல் : உலகத்தை கிராமம் என அழைத்த மார்ஷெல் மெக்லான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here