ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்திருந்த ஜியோபோன் எனப்படும் 4ஜி ஃபீச்சர் ரக மொபைலை ஆண்ட்ராய்டு ஓரியோ கோ பதிப்பை பின்பற்றி அறிமுகம் செய்ய உள்ளதாக அறியப்படுகின்றது.

ஜியோபோன் ஆண்ட்ராய்டு

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீடியாடெக் நிறுவனம், MT6739 , MT6580 ஆகிய இரு சிறப்பு சிப்செட்களை ஆண்ட்ராய்டு கோ இலகு எடை பதிப்பு மாடலுக்கு என பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளது.

புதிய மீடியாடெக் பிராசெஸர்கள் மிக சிறப்பான வேகத்தில் இயங்கும் வகையில் குறைந்த சேமிப்பு மற்றும் ரேம் கொண்ட மாடலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்நிறுவனம் ஜியோ டெலிகாம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால், விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ கோ எடிசன் இயங்குதளத்தை பெற்ற மாடலாக ஜியோபோன் ரூ.1500 விலையில் அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய மீடியாடெக் சிப்செட்டுகள் 1ஜிபி ரேம் அல்லது அதற்கு குறைந்த ரேமை கொண்ட ஃபீச்சர்போன் அல்லது ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி மொபைல் தயாரிப்பாளராக விளங்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் , குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி, இன்ஃபினிட்டி டிஸ்பிளே ஆகியவற்றை பெற்ற கோ எடிசன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.