ஜூன் 11.., Mi நோட்புக் ஹாரிஜன் எடிசன் விற்பனைக்கு வெளியாகிறது

இந்தியாவில் சியோமி நிறுவனம் முதன்முறையாக விற்பனைக்கு வெளியிட உள்ள Mi நோட்புக் ஹாரிஜன் எடிசன் (Mi Notebook Horizon Edition) லேப்டாப் மிக சிறப்பான செயல்திறன் மிக்கதாக விளங்குவதுடன் இந்தியாவிற்கு என தயாரிக்கப்பட்ட மாடலாக விளங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த லேப்டாப் ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்க வெளியிடப்பட உள்ள நிலையில் ட்விட்டர் மூலமாக இந்த மாடலின் பெயரை உறுதி செய்திருப்பதுடன் சில முக்கியமான தகவல்களும் கசிந்துள்ளது. குறிப்பாக 14 அங்குல டிஸ்பிளே பெற்று பெஸல்-லெஸ் டிஸ்பிளேவுடன் இந்த லேப்டாப்பில் DTS ஆடியோ சிஸ்டம் கொண்டிருக்கும். அதே நேரத்தில் 10 மணி நேரம் தாக்குபிடிக்கின்ற வகையிலான பேட்டரியை கொண்டிருக்கும்.

விற்பனைக்கி சியோமி வெளியிட உள்ள Mi நோட்புக் ஹாரிஜன் எடிசன் மாடலின் விலை மற்றும் முழுமையான நுட்ப விபரங்கள் தற்போது கிடைக்கவில்லை.