பிஎஸ்என்எல் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் இணைந்து 4ஜி வோல்ட்இ ஆதரவு பெற்ற மைக்ரோமேக்ஸ் பாரத் 1 பீச்சர் போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

பிஎஸ்என்எல் பாரத் 1

இந்தியாவின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோமேக்ஸ் உடன் இணைந்து பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு துறை நிறுவனம் இன்றைக்கு டெல்லில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த மொபைல் போன் 2.4 அங்குல திரையுடன் டி9 கீபோர்டு பெற்றதாக வரவுள்ள மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டு இயக்கப்பட்டு 2000mAh பேட்டரி கொண்டதாகவும் இரண்டு சிம் கார்டு ஆதரவினை கொண்டிருப்பதுடன் 4ஜி வோல்ட்இ தொடர்பினை மேற்கொள்ள இயலும்.

பிஎஸ்என்எல் 97

இந்த மொபைலுக்கு என பிரத்தியேகமான திட்டத்தை பிஎஸ்என்எல் செயல்படுத்த உள்ளது. அதாவது ரூ.97 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உட்பட டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்க உள்ளது மைக்ரோமேக்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

ரூ.2200 விலையில் பிஎஸ்என்எல் பாரத் ஒன் 4ஜி பீச்சர் போன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.