இந்தியாவை மையமாக கொண்டு செயல்படும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி டிஸ்பிளே மொபைல் ரூ.9,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி மொபைல் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி

சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் எல்ஜி G6 போன்ற உயர்ரக மொபைல் போன்களில் இடம்பெற்றுள்ள இன்ஃபினிட்டி திரையை பட்ஜெட் விலையில் மிக சிறப்பான வசதிகளுடன் மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

உயர்ரக மொபைல் போன்களில் மட்டுமே இடம்பெற்றுள்ள இன்ஃபினிட்டி திரை அனுபவத்தினை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேன்வாஸ் இன்ஃபினிட்டி மொபைல் 5.7 அங்குல உயர்தர தெளிவுத்திரையுடன் 720×1280 பிக்சல் தீர்மானத்தை கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி மொபைல் அறிமுகம்

பிராசஸர் & ரேம்

இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425  செயற்படுத்தி பெற்று 3ஜிபி ரேம் கொண்டு இயக்கபட்டு அதிகபட்சமாக 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்றுள்ள நிலையில் சேமிப்பு திறனை நீட்டிக்க 128ஜிபி வரையிலான திறன் பெற்ற மைக்ரோ எஸ்டி அட்டைகளை பயன்படுத்தலாம்.

கேமரா துறை

F/2.0, 5P lens, சூப்பர் பிக்சல் நுட்பம் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ள பின்புற பிரைமரி 13 மெகாபிக்சல் திறனுடன் கிடைக்கப் பெறுகின்றது.

F/2.0 , செல்பி படங்களுக்கு பிரத்தியேகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அம்சத்தை பெற்றுள்ள முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி மொபைல் அறிமுகம்

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை கொண்டு செயற்படுத்தப்படுகின்ற கேன்வாஸ் இன்ஃபினிட்டி மொபைல் போனில் 2,900 mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

பின்புறத்தில் கைரேகை சென்சார், 4G, VoLTE, 3G, Wi-Fi, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB OTG ஆகியவற்றை பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி மொபைல் அறிமுகம்

விலை

தற்போது அமேசான் இணையதளத்தில் முன்பதிவு நடந்து வருகின்ற நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் 1ந் தேதி 12 மணிக்கு தொடங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here