உலகின் மிகப்பெரிய நுட்ப நிறுவனங்களின் ஒன்றான மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பெற்ற ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

பில் கேட்ஸ்

பொதுவாக டெக் நிறுவனங்களில் முன்னணியாக விளங்கும் ஆப்பிள், கூகுள் ஆகியவற்றுடன் போட்டியாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் இயங்குதள ஆதரவு பெற்ற மொபைலை அறிமுகம் செய்திருந்த போது போதிய வரவேற்பினை பெறாமல் தோல்வியை தழுவியது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபாட் கருவிகளில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இந்நிறுவனத்துக்கு போட்டியாக கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றது. முன்னணி நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சார்ந்த பில் கேட்ஸ்  ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அதிக விண்டோஸ் செயிலிகளை கொண்ட ஆண்ட்ராய்டு போனை மட்டுமே பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த கருவி என அவர் குறிப்பிடவில்லை.