விரைவில் சர்ஃபேஸ் லேப்டாப் 2-வை இரண்டு வகையில் அறிமுகம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆண்டு விழாவை வரும் அக்டோபர் 10ம் தேதி கொண்டாட உள்ளது. இந்த நாளில் தனது புதிய சர்ஃபேஸ் லேப்டாப்களின் வரிசையில் சர்ஃபேஸ் லேப்டாப், சர்ஃபேஸ் புரோ மற்றும் சர்ஃபேஸ் ஸ்டுடியோ பெர்சனல் கம்ப்யுட்டர் போன்றவை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் சர்ஃபேஸ் லேப்டாப் 2-வை இரண்டு வகையில் அறிமுகம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

ஆண்டு விழா நிகழ்வுக்கு முன்பே, மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 2-வின் படங்கள் வெளியாக உள்ளது. இதில் சுவரசியமான விஷயம் என்னவென்றால், இந்த லேப்டாப்கள் பிளாக் கலரில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு கிராபைட் கோல்ட் வகைகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சர்ஃபேஸ் லேப்டாப் 2-வை இரண்டு வகையில் அறிமுகம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

இந்த லேப்டாப்கள், முந்தைய லேப்டாப் போன்ற டிசைன் மற்றும் போர்ட்கள், ஆல்பிட்களுடன் மேம்படுத்தப்பட்ட 8வது ஜெனரேசன் இன்டெல் கோர் சீரிஸ் CPU-கள் மற்றும் வேகமான மெம்மரிகளை கொண்டிருக்கும். இதுமட்டுமின்றி சர்ஃபேஸ் புரே வகை லேப்டாப்களும் பிளாக் கலரில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.