மூன்று இந்திய மொழிகளில் ஸ்பீச் கார்பஸ்-ஐ வெளியிட்டது மைக்ரோ சாப்ட் நிறுவனம்

இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் குஜராத்தி ஆகிய மூன்று மொழிகளில், ஒரு பொருளை பற்றிய முழுமையான இலக்கியத் தொகுப்புகளுடன் கூடிய ஸ்பீச் கார்பஸ்-ஐ மைக்ரோ சாப்ட் நிறுவனம் சோதனை அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

இந்திய மொழிகளின் ஸ்பீச் தகவல்களை பெரியளவில் சேகரித்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், இதற்காக மொழி ஆராச்சியாளர்கள் மற்றும் வல்லுனர்களை பயன்படுத்தி அனைத்து அப்ளிக்கேஷன்களையும் தயாரித்து வருகிறது. இந்திய மொழிகளில் ஸ்பீச் கார்பஸ்கள் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு, உள்ளூர் மொழிக்கு ஏற்ப கம்ப்யூட்டர் வெர்சனாக மாற்றப்படுகிறது.

மூன்று இந்திய மொழிகளில் ஸ்பீச் கார்பஸ்-ஐ வெளியிட்டது மைக்ரோ சாப்ட் நிறுவனம்

இதுகுறித்து பேசிய மைக்ரோ சாப்ட் நிறுவன செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உயர்அதிகாரி, சுந்தர் சீனிவாசன், டிஜிட்டல் படிப்பறிவு பல்வேறு மொழி பேசுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாகல் நம்புகிறோம். இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பீச் கார்பஸ், மொழி தெரியாத இந்தியர்கள் இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள உதவும். தொழில்நுட்ப வல்லுனர்கலை பயன்படுத்தி இந்த வாய்ஸ் அடிப்டையான கம்ப்யூட்டடிங் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் ஸ்பீச் கபார்ஸ், உலகின் பெரியளவிலான மற்றும் மிகவும் முக்கிய அறிவியல் மற்றும் தொழிநுட்ப முறைகளை பயன்படுத்து பேச்சுவழக்கு மொழிகளை செயல்படுத்தும் இன்டர்ஸ்பீச் 2018ல் கருத்தரங்கில் சோதனை செய்யப்பட்டது.

மூன்று இந்திய மொழிகளில் ஸ்பீச் கார்பஸ்-ஐ வெளியிட்டது மைக்ரோ சாப்ட் நிறுவனம்

1998-ல் பாஸா திட்டம் தொடங்கப்பட்டது முதல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மொழிகளுக்காக பணியாற்றி வருகிறது. இந்த பணிகள் மூலம் பயனாளர்கள், இந்தியன் மொழி இன்புட் டுல்-ஐ பயன்படுத்தி இணையதளத்தில் உள்ள மற்ற மொழி தகவல்களை உள்ளூர் மொழிகளில் படிக்க முடியும். இதுமட்டுமின்றி ஹிந்தி, பெங்காலி, தமிழ் மொழிகளில் இருந்த மொழி பெயர்ப்பை, தற்போது தெலுங்கு மொழிக்கும் விரிவு படுத்தியுள்ளது. சமீபத்தில் இமெயில் அட்ரஸ்-ஐ பல மொழிகளில் டைப் செய்யும் முறையும் அறிமுகம் செய்தது. மேலும், விண்டோஸ் 10-காக தமிழ்99 கீபோர்த்டையும் உருவாக்கியுள்ளது. இந்திய மொழிகளான ஹிந்தி,, கன்னடம், பெங்காலி, மலையாளம் போன்ற மொழிகள் இதில் டைப் செய்யலாம்.