விண்டோஸ் 7 ஆதரவு ஜூலை 2019 முதல் நிறுத்தப்படுமா..!

பிரசத்தி பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 ஆதரவு ஜூலை மாதம் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 12ந் தேதி வரவுள்ள புதிய விண்டோஸ் 7 பாதுகாப்பு சார்ந்த மேம்பாட்டை SHA-1 அல்காரிதம் மேம்பாட்டை நீங்கள் அப்டேட்ட செய்யவில்லை என்றால் ஜூலை மாதம் முதல் விண்டோஸ் 7 செயல்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைந்த பாதுகாப்பினை பெற்ற SHA-2 அப்டேட் ஜூலை மாதம் வழங்கப்பட உள்ளது. பொதுவாக விண்டோசு 7 ஆதரவு அதிகர்வப்பூர்வமாக ஜனவரி 14, 2020- ல் நிறுத்தப்பட உள்ளது.

விண்டோஸ் 7 பாதுகாப்பு அப்டேட்

இதுகுறித்த அறிக்கையில் மார்ச் 12ல் வழங்கபட்ட உள்ள SHA-1 ஹேஷ் அல்காரிதம் பாதுகாப்பு படிமுறை, அதிகரித்த செயலி செயல்திறன், மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் வருகை ஆகியவற்றில் காணப்படும் மிகவும் பலவீனம் காரணமாக காலப்போக்கில் குறைவான பாதுகாப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை விட மேம்பட்ட பாதுகாப்பு சார்ந்த செக்யூர் ஹாஷ் அல்காரிதம் 2 (SHA-2) போன்ற வலுவான மாற்றுகள் இப்போது அதே சிக்கல்களில் பாதிக்கப்படாததால் வலுவானதாக அமைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

எனவே, மார்ச் 12ந் தேதி வரவுள்ள SHA-1 அல்காரிதம் உடனடியாக மேம்படுத்த வேண்டும், இதன் காரணமாக SHA-2 பாதுகாப்பு சார்ந்த அப்டேட்ட் வழங்கப்படும் போது மேம்பாடு பெற இயலும், அவ்வாறு பெற தவறினால் பாதுகாப்பு மேம்பாடுகள் விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

விண்டோஸ் 7 ஆதரவு ஜூலை 2019 முதல் நிறுத்தப்படுமா..!

மொத்த விண்டோஸ் கணினி பயன்பாட்டாளர்களின் பங்களிப்பில் 39.22 சதவீதம் மட்டும் விண்டோஸ் 10 நடைமுறைக்கு மாறியுள்ளது. மீதமுள்ள கருவிகளில் அதிகபட்சமாக 36.90  சதவீதம் விண்டோஸ் 7 இயங்குதளத்தை பெற்றுள்ளன. இந்த சந்தை நிலவரம் டிசம்பர் 2018 மாத முடிவினை அடிப்படையாக கொண்டதாகும்.

மைக்ரோசாப்ட் விண்டோசு 7 ஆதரவு அதிகர்வப்பூர்வமாக ஜனவரி 14, 2020- ல் நிறுத்தப்பட உள்ளது. அதன்பிறகு பாதுகாப்பு சார்ந்த ஆதரவினை பெற கட்டணமுறையை செயல்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.