பிரசத்தி பெற்ற மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் புதிய மேம்பாடுகளில் தமிழ் மொழியை 60 மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர்

மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர், ஆஃபீஸ் 365 செயலிகளான வோர்ட், எக்செல் மற்றும் பவர்பாயின்ட் ஆகியவற்றுடன் தேடுதல் தளமான பிங் டிரான்லேட் ஆகியவற்றில் கிடைக்க தொடங்கியுள்ளது.

பவர்பாயின்ட் ஆட்-இன், அல்லது ஏ.பி.ஐ கொண்டு 60 மொழி எழுத்துக்களை மொழிமாற்றம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள,இதில் 10 க்கு அதிகமான மொழியில் குரல் வழி பெயர்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி வேற்று மொழியில் மற்றவர்கள் பேசுவதை கவனித்து அதனை எழுத்து வடிவில் உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்த்து வழங்கும் திறனை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. நமது தமிழ் மொழியை உலகம் முழுக்க சுமார் 70 கோடிக்கும் அதிகமானோர் பேசி வருகின்றனர்.