இந்தியாவின் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் ஃபிரீடம் 251 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூன் 30ந் தேதி முதல் டெலிவரி செய்யப்பட உள்ளது. ஃபிரீடம் 251 மொபைல் படங்கள் மற்றும் நுட்ப விபரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் விலை குறைவான ஸ்மார்ட்போன் என அறியப்படுகின்ற ஃபிரீடம் 251 ஸ்மார்ட்போன் டெலிவரிக்கான இறுதிகட்ட நிலையில் உள்ளதால் முழுமையான தகவல்கள் மற்றும் உண்மையான மொபைல்போன் படங்கள் வெளியாகியுள்ளது.

ஃபிரீடம் 251 மொபைல் நுட்பவிபரம்

  • டிஸ்பிளே ; 4 இன்ச் டிஸ்பிளே
  • பிராசஸர் ; 1.3GHz குவாட் கோர் பிராசஸர்
  • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் 
  • ரேம் ; 1GB ரேம்
  • கேமரா; 8 மெகாபிக்சல் கேமரா
  • முன்பக்க கேமரா ; 3.2 மெகாபிக்சல் கேமரா
  • சேமிப்பு ; 8GB (MicroSD upto 32GB)
  • பேட்டரி ; 1800mAh
  • விலை ;251
இரு சிம் கார்டு ஸ்லாட்களை பெற்றுள்ள 251 மொபைலில் 3ஜி தொடர்பு , வை-ஃபை போன்றவற்றை பெற்றுள்ளது. தற்பொழுது 2 லட்சம் மொபைல்கள் தயார்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 கோடிக்கு மேற்பட்ட முன்பதிவினை பெற்றுள்ள ஃபிரீடம்251 டெலிவரி தொடங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க ; குறைந்த விலை 32இன்ச் எல்இடி டிவி அறிமுகம் விரைவில்

இதுபற்றி உங்கள் கருத்து என்ன மறக்காமா கமெண்ட்ஸ் பன்னுங்க…..